பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

113


வருத்தும் கரு நெருப்பினிடையே தோன்றி யெழுந்த வெள்ளை நெருப்பாகிய திங்களே! அவருடைய (இராமருடைய) கருநிறத்திற்குத் தோற்று அலறிக் கொண்டிருக்கும் கடலை நீ தோன்றி அலைமோதச் செய்து வருத்துகிறாய்; என்னையும் வருத்துகிறாய்; ஆனால், திங்களே! நீ கொடியை அல்லை. நீ அமிழ்தத்துடன் தோன்றியதால் யாரையும் கொல்லமாட்டாய், மற்றும், திருமகளோடு கடலில் தோன்றியதால் என்னைச் சுடுவாயா? சுடாதே - என்கிறாள். பாடல்கள்:

மிதிலைக் காட்சிப் படலம்

“பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும்
என்வழி உணர்வும் எங்கும் காண்கிலேன்
மண்வழி நடந்து அடிவருந்தப் போனவன்
கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்” (55)


“கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய்
வடு இல் இன் அமுதத்தோடும் வந்தனை
பிடியின் மென்னடைப் பெண்ணோடு என்றால் எனைச்
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே” (77)

சீதையின் நிலை இஃதாக, இரவு முழுதும் சீதையை எண்ணி வருந்திக் கொண்டிருந்த இராமன், மறுநாள் வில்லை நாண் ஏற்றி முறித்துச் சீதையை மணக்கத் தகுதி பெற்றவனானான்.

ஆவலைத் தூண்டுதல்

சீதையால் காதலிக்கப் பெற்ற இராமன் வில்லை நாணேற்றி ஒடித்த நற்செய்தியைத் தெரிவிக்க நீல மாலை என்னும் தோழி சீதைபால் ஓடினாள்; சீதையை வணங்கினாள்; மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினாள். இதைக் கண்ட சீதை, அவளை நோக்கி, உன் மகிழ்ச்சிக்குக் காரணமான