பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

சுந்தர சண்முகனார்


சிறப்பித்துப் புகழ்கின்றனர். செய்யுள் நடைமுறையில் உள்ள “கணக்கதிகாரம்” என்னும் தமிழ்க் கணித நூல் இன்றும் வாழ்கிறது. நம் தமிழ்க்கணக்கில் ‘பின்ன’ வாய்ப்பாடு கூட உண்டு. இப்பொழுது சிலர் தாளில் போட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் சில பின்னக் கணக்குகளை, அப்போது பின்ன வாய்ப்பாட்டின் துணை கொண்டு மனக்கணக்காகவே போட்டு விடுவார்களாம்.

தமிழ்க் கணிதத்தில் சிறு சிறு பின்னங்களுக்குக்கூடத் தனித்தனிப் பெயர்கள் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாகச் சில நோக்கலாம்:

– முந்திரி – முக்காணி
– அரைக்காணி – ஒருமா
– காணி – இருமா
– அரைமா – மும்மா

இப்படியே இன்னும் பல உண்டு. இவற்றையெல்லாம், கொறுக்கையூர் காரி நாயனார் இயற்றிய கணக்கதிகாரம் என்னும் நூலில் உள்ள,

இம்மிதான் சரைத் தரையெனவே வைத்திதனைச்
செம்மைதரும் கீழ்முந் திரிசெய்து - பின்னவை
மூன்றுபடி பத்திரட்டி முந்திரியே ஒன்றென்றார்
ஆன்ற அறிவி னவர்.
முந்திரி அரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய்
வந்ததோர் காணிநான் மாவாக்கி - ஒன்றொடு
நாலாக்கிக் காலாக்கி நன்னுதலாய் காலதனை
நாலாக்கி ஒன்றாக நாட்டு.

என்னும் பாக்களானும் பிறவற்றானும் அறியலாம்.