பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

சுந்தர சண்முகனார்


திரியும் பலருக்குத் தமிழ் நிகண்டு நூல்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இன்னும் சொல்லப்போனால் நிகண்டு எனறால் பணத்துக்கு எத்தனை படி என்று கேட்பவர்களும் இன்று இருக்கக்கூடும். ஆனால் அந்தக் காலக் கல்வி முறையில் நிகண்டு என்னும் இந்த அரிய கலைச் செல்வம் நடைமுறையில் இருந்தது.

அடுத்தபடியாக, வாழ்க்கைக்குப் பயன்படும் பல அறிவு ரைகளைக்கூறும் ‘சதகம்’ என்னும் ஒருவகை நூலும், இன்ன பிற சிற்றிலக்கியங்களும் பின்னர்ப் படிப் படியாகப் பேரிலக்கிய-இலக்கண நூற்களும் கற்பிக்கப்பட்டன. உரைநடை (வசன) நூல்கள் இல்லாமல் செய்யுள் நூல்களே இருந்த அக்காலத்தில்-எல்லாக் கலையும் செய்யுள் வாயிலாகவே கற்ற அக்காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு நிகண்டு, சதகம் முதலிய நூல்களைக் கற்பது மிகவும் எளிதாக இருந்தது. ‘கோழி முட்டையிடும்; முட்டை வெள்ளையாக இருக்கும். பசு பால் கொடுக்கும்; பால் வெள்ளையாக இருக்கும்’ என்பன போன்றவற்றைப் படிப்பு என்னும் பெயரில் இன்று படிப்பவர்க்கு நிகண்டு முதலிய நூல்கள் சிம்ம சொர்ப்பன’ மாகத்தான் இருக்கும். பழைய முறைக் கல்வி கற்ற நம் பாட்டனார்கள், ‘பால் வெள்ளையாய் இருக்கும்’ என்பது ஒரு படிப்பா என்று சொல்லிச் சிரிப்பதை நாம் வெட்கப்படாமல் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

புறவினைச் செயல்கள்

மற்றும், ஆசிரியர் மாணவர்களைக் கோயிலுக்கும், திருவிழாவிற்கும் அழைத்துச் செல்லுதல், விழா நாட்களிலும் கொண்டாட்ட நாட்களிலும் கோலாட்டம், பாட்டு, நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தச் செய்தல், வேலை செய்வித்தல், முதலிய உற்சாகமான செயல்கள்