பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

சுந்தர சண்முகனார்


“ஈதல் இயல்பே இயம்புங்காலைக்
காலமும் இடமும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி யிருந்து தன்தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப”

இது, பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழன்கண்ட கல்வி முறையாகும். இந்த நன்னூல் பாயிரப்பாடலின் பொருள் அறிந்தவர்கள், இந்த நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியாயிருக்கும் பயிற்றுமுறை, ஏற்கனவே நம் நூல்களில் சிறந்த முறையில் பேசப்பட்டுள்ளது என்பதை நன்கு உணர்ந்து தெளிவு பெறுவர். இப்படியாக இன்னும் எத்தனையோ சிறந்த கல்விக்கொள்கைகள் பழந் தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளன. 

17. காக்கை கற்பிக்கும் ஆக்க நிலை

மலையத்தனைக் கருத்து

நாம் நாடோறும் எளிதிற் காணும் காக்கைகளின் செயல் ஒன்றினைக்கொண்டு, வள்ளுவனார் மலையத்தனை பெரிய கருத்து ஒன்றை மக்கள் இனத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அந்தக் கருத்தைக் கட்டளைக் கருத்தாகவே கற்பித்துக் கூறியுள்ளார் என்றும் கொள்ளலாம்.

இந்தியர்கள் தமியராய் - மறைவாக உண்ணுவர் என்பதாக ஒரு கருத்தை மேனாட்டார் கூறுவதாகச் சொல்வதுண்டு. மறைவிடத்திலன்றி வெளியிடத்தில் பலரும்