பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

127


காணவும் உண்ணுபவர் எனப்படுபவரும் உண்ணும், உணவைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுவதில்லை.

காக்கை கற்பிக்கும் பாடம்

ஆனால், ஒரு காக்கையோ, ஓரிடத்தில் ஓர் இரையைக் காணின், மறைவாகத் தான் மட்டும் தனித்து உண்ணாமல், மற்ற காக்கைகளையும் கரைந்து (அழைத்து) உண்ணும். உண்டு கொண்டிருக்கும் போதும் கரைந்துகொண்டே உண்ணும்.

மக்கள் இவ்வாறு செய்வரா? இல்லையே! தாம் பெற்ற செல்வத்தை மறைக்காமல், காக்கையைப் போல், மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து நுகரும் மாந்தர்க்குச் செல்வம் குறைந்துகொண்டேயிருக்குமா-அல்லது-நிறைந்துகொண்டேயிருக்குமா? குறைந்துகொண்டே போதுதான் இயற்கை. பரி வள்ளல் கூட வாரி வாரி வழங்கியதால் ஒன்றும் இல்லாதவனாகிவிட்டான் என்பது ஒருசாரார் கருத்து. அளவின்றிப் பிறர்க்கு அளித்தமாந்தர் சிலர் வறிஞராகி விட்ட வரலாறு நேரில் அறிந்ததே.

வள்ளுவரின் புரட்சி

உண்மை யிவ்வாறிருக்க, வள்ளுவனார் புராட்சியான ஒரு புதுக்கருத்தைக் கூறியுள்ளார். கரவாது (மறைக்காமல்) இனத்தையும் கரைந்து உண்ணும் காக்கையைப் போல் நடந்து கொள்பவர்க்கே செல்வங்களும் உளவாகும் என்று அவர் அறிவித்துள்ளார். இக்கருத்துடைய குறளாவது:

“காக்கை கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள”

(பொருட்பால் - சுற்றம் தழால்)