பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

133


மாநிலம் அந்த நாடு எனவும், சூழ்நிலைகளின் உதவியால் நாமாக முடிவு கட்டுகிறோம்.

இது போலவே, பூவுலகம் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ஞாயிற்றையும் சுற்றும் சூழ் நிலையால், இரவு–பகல், காலை – மாலை, கோடைக் காலம் – மழைக் காலம் குளிர்காலம் என்றெல்லாம் பகுத்துக் கொள்கின்றோம். செய்த செய்கின்ற - செய்யப்போகிற நிகழ்ச்சிகளைக் கொண்டு இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூவகைப்படுத்திக் கொண்டோம். எனவே சூழ்நிலைகளின் துணையால் காலம் என ஒன்றை நாம் உண்டாக்கிக் கொண்டுள்ளோம்.

பொருள்களின் புடை பெயர்ச்சியாகிய தொழில் நடந்து கொண்டிருக்கும் போது, நடந்து விட்டதை இறந்த காலமாகவும் தொடர்ந்து நடக்க விருப்பதை எதிர் காலமாகவும் கொள்வதால், இடையில் நிகழ் காலம் என ஒன்று இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று கருதிச் சிலர் நிகழ்காலத்தை நீக்குகின்றனர். தொழில் நடந்து விட்டதோ இனி நடக்க இருப்பதோ நேருக்கு நேர் புலப்படாமல் மறை பொருளாக இருப்பதால், இறப்பு-எதிர்வு இல்லை. நேருக்கு நேர் தொழில் நடப்பது தெரிவதால் நிகழ்காலம் என்பது மட்டுமே உள்ளது என்பது நிகழ்காலக் கொள்கையினரின் கூற்று.

இறப்பு எதிர்வு என்பன மறை பொருளாதலானும், நிகழ்வு ஒன்றே நேருக்குநேர் தெரிந்து கொண்டிருப்பதாலும், நன்னூல் ஆசிரியர், இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற வரிசையில் சொல்லாமல், இறப்பு எதிர்வு நிகழ்வு என வரிசைப்படுத்தியுள்ளார் எனச் சங்கரநமச்சிவாயர் கூறியிருப்பதிலிருந்து அறியக்கூடியது, நிகழ்காலம் என ஒன்று உண்டு என்னும் உறுதிப்பாடே! நிகழ்காலம்