பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

141


திட்டிப்பேசி நகையாடும் இந்தக் காலத்தில், சிலர் தேர்வு எழுதும் போது பார்த்து எழுதுவதற்கு உரிமை உண்டு என்று உரிமை கொண்டாடுவது - கண்டிக்கும் ஆசிரியர்கட்கு அடி - உதை கொடுப்பதும் வழக்கமாகிக் கொண்டுவரும் இந்தக் காலத்தில், இன்னும் சொல்லொணா முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஆசிரியர்களைப் பற்றியும் மாணாக்கர்களைப் பற்றியும் எண்ணிப்பார்க்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

அந்தக் காலத்தில், ஆசிரியர்களின் கை மேலோங்கியிருந்ததும், மாணாக்கர்கள் அடிமைகள்போல் அடக்கியாளப்பட்டதும் உண்மைதான்! இந்த நிலை பிற்காலத்தில் கண்டிக்கப்பட்டது. குழந்தை உளவியல் (Child Psychology) கல்வி உளவியல் (Educational Psychology) சமூக இயல் (Socialogy) ஆகிய துறைகளும் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், ஆசிரியர்கள் மாணாக்கர்களை செல்லக் குழந்தைகள் போல நடத்த வேண்டும் என்பதுபோல் ஒருவகைப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதும் உண்மைதான்! கூர்ந்து நோக்குங்கால், அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்ட அடிமை முறையும் சரியன்று - இந்தக் காலத்தில் தரப்பட வேண்டியதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவு மீறிய செல்லமும் சரியன்று - என்று கூறத் தோன்றுகிறது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி என்பவரால் இயற்றப்பெற்ற நன்னூல் என்னும் நல்ல நூலை அணுகலாம்.

நன்னூலில் அன்புள்ள நல்லாசிரியர்க்கு உரிய இலக்கணமாகக் கூறப்பட்டிருப்பதாவது:-

அருளும், கடவுள் நம்பிக்கையும், உயர்ந்த குறிக்கோளும், மேன்மையும், பல கலைகளையும் தெளிவாகப் பயின்றுள்ள அறிவுத் திறனும் (Subject Knowledge), கருத்துக்களை