பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

சுந்தர சண்முகனார்


முறையில் எஞ்சியுள்ள அரைப் பங்குப் புலமையும் நிரம்ப, முழுப் புலமையும் நிறைவுறும்.

“நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாகக் கொளினே மடம்நனி இகக்கும்”

“ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்
பெருக நூலில் பிழைபாடு இலனே”

“முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும்”
 
“ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
கால்கூறு அல்லது பற்றலன் ஆகும்”

“அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்”

என்னும் நன்னூற் பாக்களால் நன்குணரலாம்.

எனவே, இம்முறைகளால் வளர்க்கப்படும் கல்விக் குழந்தைதான் மேன்மேலும் வளர்ந்து விளக்கம் பெறும்; முழுப் பயனையும் கொடுப்பதும் ஆகும்.

அன்றும் இன்றும்

இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முன்பே - அஃதாவது - கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே நன்னூல் நவின்றுள்ள பாடம் பயிற்றும் முறைகள் பல, இந்தக் காலத்தில் புதியன போல அருமை பெருமையுடன் கூறப்படும் பயிற்று முறைகள் பலவற்றோடு ஒத்திருப்பதை ஈண்டு ஒரு சிறிது ஆய்வாம்;