பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

13


எழுந்து போங்கள் என்று பிடித்துத் தள்ளுவதாகப் பொருள் கொண்டு, மரியாதையாக அந்த இடத்தை விட்டு அகன்று விடல் வேண்டும். இவர்களின் பேச்சு மறைமுகமான - வஞ்சகமான வன்சொல்லாகக் கருதப்படும்.

ஒரு சிலர் வந்தவரை நோக்கி, “ஏம்பா, நீ செய்வது ஒன்றும் பிடிக்கவில்லை - இப்படி எல்லாமா பேசுவது - இப்படி எல்லாமா நடந்து கொள்வது? ‘ச்சே-ச்சே’ - இது சரியில்லை” - என்று எதன் தொடர்பாகவோ கடிந்து பேசுவார்கள். பேச்சின் இடையிலே, உள்ளே இருப்பவரை அழைத்து, ‘தம்பிக்குக் காஃபி கொண்டு வந்து கொடு’ என்பார்கள். வந்தவர் எனக்குக் காஃபி வேண்டியதில்லை என்று சொன்னால், வீட்டிற்கு உடையவர், ‘பார்த்தாயா. பார்த்தாயா? ஏன் காஃபி வேண்டியதில்லை? நம் வீட்டிற்குவரின் கட்டாயம் காஃபி சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உள்ளேயிருந்து காண்பி வந்துவிடும். ‘இந்தா-இந்தக் காஃபியைப் பிடி - கட்டாயம் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் - என்று கட்டாயப்படுத்திப் பருகச்செய்வர்.

முதலில், சிலர், உண்மையாக ஒன்றும் தராமல் இனிமையாகப் பேசி வாய்ச் சொல்லாலேயே காஃபி கொடுப்பதாக நடித்து அனுப்பி விடுவார்கள் என்பதை அறிந்தோம். இன்னாரின் அகம் வேறு-முகம் வேறு. அடுத்தாற்போல், எதற்காகவோ வன்மையாகக் கண்டித்துப் பேசியவர், உண்மையிலேயே உள்ளம் உவந்து கட்டாயப்படுத்தியாவது சாப்பிடச் செய்துள்ளார். இதனால் என்ன தெரிகிறது? வஞ்சக உள்ளம் உடையவர் பேகம் இன்சொல்லினும் உண்மையான அன்புள்ளம் உடையவர்கள் பேசும் வன்சொல்லே இனிமையானது என்னும் கருத்து தெரிய வருகிற தல்லவா? இதைத்தான் சிவப்பிரகாச அடிகளார் தமது நன்னெறி நூலில்,