பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

157



“யரழ என்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்” (29),

“மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம்முன்தாம் வரூஉம் ரழவலங் கடையே” (30)

என்பது தொல்காப்பிய நூற்பாக்கள்.

2.1 நச்சினார்க்கினியர் உரை

இந்த நூற்பாக்களுக்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர், இந்த இயைபுகள்- மயக்கங்கள் ஒரு சொல்லுக்குள் இருக்கவேண்டும் எனக் கருதுகிறார். - அவர் விரும்புவது சரிதான். ஆனால், அதற்கேற்ற இலக்கியங்கள்-அதாவது-எடுத்துக்காட்டுகள் கிடைக்கவில்லையே. இருசொற் புணர்ச்சிக்கண் உள்ள இயைபுகளை இவர் இடைநிலை மெய்ம்மயக்கமாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், பின்னர், இருமொழிப் புணர்ச்சியிலக்கணம், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பவற்றில் கூறப்பட்டிருப்பதாகும். இவர் இவ்வாறு கூறியிருப்பினும், ஒரே நிலையில் நில்லாமல் முழுகி முழுகி எழுந்திருக்கிறார். இவருடைய உரைப்பகுதிகள் சில காணலாம்:

“டறலள என்னும் புள்ளி முன்னர்
கசப என்னும் மூவெழுத்து உரிய” (நூன்மரபு.23)

என்னும் நூற்பாவிற்குப் பின்வருமாறு எடுத்துக்காட்டுகள் தந்துள்ளார்:

“கட்க, கட்சி-கட்ப எனவும் கற்க-முயற்சி-கற்ப எனவும், செல்க-வல்சி-செல்ப எனவும் கொள்க. நீள்சினை-கொள்ப எனவும் தனிமெய் பிறமெய்யோடு மயங்கியவாறு காண்க. கட்சிறார், கற்சிறார் என்பன இருமொழிப் புணர்ச்சியாகலின் ஈண்டைக் காகா” - என்பது எடுத்துக் காட்டுப் பகுதி. இருசொற் புணர்ச்சியில் உள்ள மெய்ம் மயக்கத்தை ஒத்துக்கொள்ளாத நச்சினார்க்கினியர், ‘நீள்