பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

சுந்தர சண்முகனார்


சினை’ என்னும் ஓர் எடுத்துக்காட்டை வேறு வழியின்றித் தந்துள்ளமை வியப்பாகும். இனி அடுத்த நூற்பாவிற்குச் செல்லலாம்.

“அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்”

என்னும் நூற்பாவிற்குப் பின்வருமாறு எடுத்துக்காட்டுகள் தந்துள்ளார்:-

“கொல்யானை, செல்வம், வெள்யாறு, கள்வன் என வரும். இவற்றுள் ‘கொல்யானை’ என வினைத்தொகையும் ‘வெள்யாறு’ எனப் பண்புத்தொகையும் நிலை மொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின் இவ்வாசிரியர் இவற்றை ஒரு மொழியாகக் கொள்வர் என்றுணர்க. இக்கருத்தானே மேலும் வினைத் தொகையும் பண்புத் தொகையும் ஒருமொழியாகக் கொண்டு உதாரணம் காட்டுவதும் அன்றி, இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத் தொகைக் கண்ணும் பண்புத் தொகைக் கண்ணுமன்றி ஒரு மொழிக் கண்ணே மயங்குவன உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணம் கூறினார். அவை பின்னர் இறந்தன என்று ஒழித்து அல்லனவற்றிற்கு உதாரணம் காட்டாமல் போதலே நன்றென்று கூறலும் ஒன்று”- என்பது நச்சினார்க்கினியரின் உரைப்பகுதி.

குருடர்க்குக் குருடர் கும்மிருட் டதனில் வழிகாட்டல் போல் வாய்ந்துள்ளது நச்சினார்க்கினியரின் கூற்று. தொல்காப்பியரே எடுத்துக்காட்டுகளும் தந்திருப்பின் தொல்லையிராது. வினைத்தொகையையும் பண்புத்தொகையையும் தொல்காப்பியர் ஒரு சொல்லாகக் கருதினாராம். அதனால் தாமும் இவற்றை ஒரு சொல்லாகக் கருதுகிறாராம். மற்றும், இருசொற்கள் போல் காட்சி தரும் இவ்விரு தொகைகளேயன்றி, தொல்காப்பியர் காலத்தில் முற்றிலும் ஒரு சொல்லிலேயே இந்த மயக்கம் அமைந்த தனிச்சொற்கள் இருந்தன-