பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

161


யென்றோதலானும், இணங்காதனவரின் விகாரப்படுதலானும், அது நூற்கருத்தன் றென்க!! என்பது உரைப்பகுதி. சிவஞான முனிவரின் கருத்தும் இன்னதே. பிரயோக விவேகநூல் விளக்கமும் இஃதே. இங்கே மறுக்கப்பட்டிருப்பவர் உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியரே.

3.3 எதிர்பார்ப்பு

நச்சினார்க்கினியர் எதிர்பார்ப்பது சரிதான். அதாவது, முதல்நிலை எழுத்துகள் - இறுதிநிலை எழுத்துகள் எனப்படுவன ஒரே சொல்லில் இருப்பனவாகும். அதுபோலவே, இடைநிலை எழுத்துகளின் இயைபும் ஒரு சொல்லுக்குள்ளே இருப்பதாகவே கொள்வதே பொருத்தமாகும். ஆனால், தொல்காப்பியர் கருத்து நச்சினார்க்கினியர் எதிர்பார்ப்பது போல் இருப்பதாகத் தோன்றவில்லை. தொல்காப்பியர் கருத்தும் நச்சினார்க்கினியரின் எதிர்பார்ப்பாக இருக்குமாயின் போதிய எடுத்துக்காட்டுகள் தரமுடியவில்லையே. தொல்காப்பியர் காலத்தில் இருந்த எண்ணற்ற சொற்கள் பிற்காலத்தில் வழக்கற்றுவிட்டன என்று நம்புவதற்கில்லை. சில வழக்கறலாம். பல வழக்கறா.

4. ஓர் உண்மை

நச்சினார்க்கினியர் ஓர் உண்மையை உள்ளத்தில் எண்ணிப் பார்க்காததால் மற்றவர்களோடு மாறுபடுகிறார். அந்த உண்மையாவது:

இடைநிலை மயக்கம் என்பது, ஒரு சொல்லுக் குள்ளேயோ அல்லது இரு சொற்களின் இயைபுக்குள்ளேயோ, மெய்களின் இயைபு - மயக்கம் எப்படி அமைந்துள்ளது என்னும் நிலைமையைக் கூறுவது.

ஆனால், - உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றிய லுகரப் புணரியல் என்பன, இருசொற்கள் இயையும்போது,