பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

சுந்தர சண்முகனார்


மாகிய எல்லா எழுத்தும் தனித்தனி அதற்கதுவே ஈறாக வருமெனச் சொல்லாதே அருத்தாபத்தியான் அமைதலின், ஈறுமென மிகைபடக் கூறாதொழிந்தார்.

உ-ம் “அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்” என்புழி, லகரம் முதலாகியும், கூனிறுதி ளகர வொற்றோடு மயங்கியும் நின்றது. ‘கெப்’ பெரிது என்புழி எகரம் மெய்யோடு ஈறாய் நின்றது. பிறவும் வரையறையின்றி வருதல் காண்க” - என்பது உரைப்பகுதி.

எல்லா எழுத்துகளும் முதலில் வரும் என்றதனால், எல்லா எழுத்துகளும் ஈற்றிலும் வரும் என்ற செய்திதானே தெரிய வருகிறது என்பதாகச் சங்கர நமச்சிவாயர் கூறியுள்ளார். மொழிக்கு ஈற்றில் வராத ‘எ’ என்பதும் ‘க்’ என்பதோடு சேர்ந்து ‘கெ பெரிது’ எனக் சொல்லின் ஈற்றில் வரும் என்பதாக எடுத்துக்காட்டும் தந்துள்ளார்.

8. புத்திலக்கணக்கூறு

எனவே, இப்போது அறிவியல் - உலகியல் வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப, பழைய இலக்கண விதிகள் சிலவற்றிற்குத் தேவையான இடங்களில் விலக்கு அளித்துப் புதிய விதிகள் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கருத்தைப் புதிய இலக்கண அமைப்பின் ஒரு கூறாகக் கொள்ளல் வேண்டும்.

கருத்து வழங்கிய கருவூலங்கள் (ஆசிரியர் பெயருடன்),

தொல்காப்பியம் - தொல்காப்பியர்
உரைகள் - நச்சினார்க்கினியர் & இளம்பூரணர்.
நன்னூல் - பவணந்திமுனிவர்
உரைகள் - மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் சிவஞானமுனிவர்
பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர்