பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

சுந்தர சண்முகனார்


கெழுத்துக் (Short hand) குறியீடுகளாம். எனவே, ஒருவகைக் கருவிப் பாடமாக உள்ள கணக்குக்கும் மொழி கருவிப்பாடமாகும். எனவே, மொழியைப் பிழையின்றிக் கையாளத் தெரிந்தால்தான், மற்ற பாடங்களையும் பிழையின்றிக் கற்று எழுத முடியும். ஆகவே, இலக்கணத்தின் இன்றியமையாத் தேவை இப்போது புலனாகும்.

நன்னூலின் இடம்

இப்போது முழுமையாகக் கிடைத்திருக்கும் தமிழ் இலக்கண நூல்களுள் தொல்காப்பியமே பழமையானது விரிவானது. இந்நூல், ஒரு தோற்றம், இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டில், பவணந்திமுனிவர் என்பவர், நன்னூல் என்னும் ஒரு நல்ல இலக்கண நூலைப் படைத்துத் தந்துள்ளார். இந்நூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகளாக ஐந்து இயல்கள் உள்ளன.

பவணந்தியார் தொல்காப்பியத்தில் உள்ள சில செய்திகளை விட்டுவிட்டார்; தொல்காப்பியத்தில் இல்லாத பிற்காலத்தில் மக்களின் நடைமுறை வழக்குகளில் உண்டான சில செய்திகளை நன்னூலில் சேர்த்துள்ளார்; தொல்காப்பியத்திலும் நன்னூலைச் சுருக்கமாக அமைத்துள்ளார். அதனால், இக்காலத்தினர் நன்னூலைப் பெரிதும் கையாள்கின்றனர். நன்னூலுக்குப் பிறகு எழுந்த எந்த நூல்களும் நன்னூலின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. எனவே, நாமும் இப்போது பெரிதும் நன்னூலை அடிப்படையாகக் கொண்டு நடைமுறை இலக்கணம் பற்றி ஆராயலாம். நடைமுறை இலக்கணம் என்பது, இக்காலத்தில் நடைமுறையில் பின்பற்றப்பட வேண்டிய