பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

சுந்தர சண்முகனார்


யுள்ளது. அதாவது, மீண்டும் இலக்கணத்தில் மாறுதல் செய்யவேண்டும். இந்த மாறுதல்களைப் பிற்கால உரையாசிரியர்கள் தம் உரைகளில் சேர்த்துக்கொண்டு உள்ளனர். தொல்காப்பியத்தினும் மாறுதலாகச் சில இடங்களில் நன்னூல் கூறுவதும் இஃதே. இதுதான் நடைமுறை இலக்கணம் எனப்படுகிறது. ஆனால், மாறுதலை ஓரளவே ஏற்கலாம்; கண்டபடி ஏற்க முடியாது.

நன்னூலின் தவறுகள்

நன்னூலில் உள்ள புணர்ச்சி இலக்கணம் கற்கப்பட வேண்டியது என்று சொல்லப்பட்டது. ஆனால், மக்களின் பேச்சு வழக்காற்றுக்கு மாறாக, நன்னூலில் - ஏன் - தொல்காப்பியத்திலுங்கூட, சில புணர்ச்சி விதிகள் கூறப்பட்டுள்ளன. இந்தத் தவறான விதிகளை, மொழி அறிஞர்கள் கூடிப்பேசி விலக்கிவிட வேண்டும். இவற்றைக் கற்க வேண்டியதில்லை. இத்தகைய தவறான முடிபுகளுள் சிலவற்றைக் காணலாம்.

ஒரு மொழியிலுள்ள ஒலிப்பு முறைகள் - புணர்ச்சி விதிகள், வேறுசில மொழிகளிலும் ஒத்திருப்பதுண்டு. சில காட்டுகள் வருமாறு.

கால் + ஒடிந்தது என்பதை மக்கள் பேசுங்கால், கால் ஒடிந்தது - கால் ஒடிந்தது - காலொடிந்தது - என்கின்றனர். நிலைமொழியாகிய கால் என்பதின் இறுதியில் உள்ள ‘ல்’ என்னும் உடல் (மெய்) எழுத்தின் மேல் வருமொழி யாகிய ‘ஒடிந்தது’ என்பதின் முதலில் உள்ள ‘ஒ’ என்னும் உயிர் (எழுத்து) ஒன்றி (ல் + ஒ) ‘லொ’ என்றாகி, ‘காலொடிந்தது’ என்பது உருவாயிற்று. இதனை நன்னூல்

“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே”

என்னும் நூற்பாவால் (204) அறிவிக்கிறது. பிரெஞ்சு மொழியிலும் இந்த விதி உண்டு. Comment என்னும்