பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

179


பிரெஞ்சுச் சொல்லைத் தனியே ஒலிக்கும்போது கொம்மா(ன்)’ என்றே ஒலிப்பர். இங்கே t என்பது ஊமை எழுத்தாகும். நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? - How do you do? - How are you? - என்னும் பொருளில் comment allez vous என்பதை ஒலிக்கும் போது, comment என்பதின் இறுதியில் t என்னும் மெய்யெழுத்து ‘த்’ என்னும் ஒலி பெற அதன்மேல் வருமொழி முதலில் உள்ள ‘a’ என்னும் உயிர் எழுத்து ஒன்ற, ‘ta’ என்பன ‘த’ என்னும் ஒலி பெறும். எனவே, இத்தொடர், ‘சொம்மான் தலே வு’ என ஒலிக்கப்பெறும். allez, vous என்பவற்றின் இறுதி எழுத்துகளாகிய Z, s என்பன ஊமை (Silent) எழுத்துகளாம்.

அடுத்து, கல் + உடைந்தது என்பதை மக்கள் ஒலிக்குங்கால், கல் உடைந்தது - கல் உடைந்தது - கல்லுடைந்தது என்கின்றனர். இங்கே நிலைமொழியில் ‘க’ என்னும் தனிக்குறிலின் பக்கத்தில் ‘ல்’ என்னும் ஒற்று இருக்க, அதனோடு, வருமொழி முதலில் உள்ள ‘உ’ என்னும் உயிர் சேரும் போது ‘ல்’ என்னும் ஒற்று இரட்டித்தது - அதாவது - மற்றொரு ‘ல்’ வந்து கல் + ல் + உடைந்தது = கல்லுடைந்தது என்பதை உருவாக்கிற்று. இதனை நன்னூல்,

“தனிக் குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” (205)

எனக் கூறுகிறது. ஆங்கிலத்திலும் இத்தகைய அமைப்பு உண்டு.

Big என்பது, Bi(பி) + g(க்) எனத் தனிக்குறில் முன் (முன் = பக்கத்தில்) ஒற்று வந்த நிலைமொழி யாகும். இதனோடு, வருமொழியில், Superlative degree குறியீடாகிய ‘est’ என்னும் உயிர் (e) முதல் மொழி வந்ததும், ‘g’ என்னும் ஒற்று இரட்டிக்க, Big + g + est = Biggest என்பதும் உருவாயிற்று. cut + t + ing cutting என்பதும் இத்தகையதே.