பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

சுந்தர சண்முகனார்



தொள் + நூறு = தொண்ணூறு - அதாவது - நூறில் - பத்துப்பத்தில் ஒரு பகுதி குறைந்தது என்பது இதன் பொருள்; அதாவது (100 - 10 =) 90 என்பதாம். தொள் + ஆயிரம் = தொள்ளாயிரம் - அதாவது - ஆயிரத்தில் - பத்து நூறில் ஒரு பகுதி குறைந்தது என்பது இதன் பொருள். அதாவது (1000 - 100) 900 என்பதாம். தொள் என்பதற்குத் துளைக்கப் பட்டது - குறைக்கப் பட்டது என்னும் பொருள் உண்டு. ‘தொள்ளைக் காது’ என்னும் வழக்காறு காண்க. எனவே, ஒன்பது + பத்து என்பதுதான் தொள்ளாயிரம் எனவும் ஆனதாகக் கூறுவது தவறாகும்.

ஆகவே, இந்தப் பொருந்தாப் புணர்ச்கி விதிகளை நன்னூலிலிருந்தும் தொல்காப்பியத்திலிருந்தும், விலக்கி விட வேண்டும். எனது ‘தமிழ் இலத்தீன் பாலம்’ என்னும் நூலைப் படித்தால் இது பற்றி இன்னும், விரிவாக அறிந்து கொள்ளலாம். அடுத்து, இனி, ஒற்று மிகல் - மிகாமை பற்றிய புணர்ச்சி விதிகளைப் பார்க்கலாம்.

வல்லொற்று மிகும் / மிகா இடங்கள்

இந்த வேற்றுமையில் வல்லொற்று மிகும்; இந்த வேற்றுமையில் மிகாது. இந்த அல்வழியில் ஒற்று மிகும்; இந்த அல்வழியில் மிகாது. இந்தத் தொகையில் மிகும்; இந்தத் தொகையில் மிகாது. இந்த எச்சத்தில் மிகும்; இந்த எச்சத்தில் மிகாது. இந்தக் குற்றிய லுகரத்தில் மிகும்; இதில் மிகாது - என்றெல்லாம் விதிகள் சொல்லப்பட்டிருத்தலின், வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி, வேற்றுமைத் தொகை, பண்புத்தொகை, இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை, உவமைத் தொகை, வினைத் தொகை, உம்மைத்தொகை, வினை முற்று, வினையெச்சம், பெயரெச்சம், குற்றியலுகரம் (முற்றிய லுகரம் முதலியன பற்றி நன்னூலிலிருந்து தெளிவாகக் கற்றுக்கொள்ளல்