பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

சுந்தர சண்முகனார்


பட்டான் - நின்று, இருந்து - ஐந்தன் சொல்லுருபுகள். எனது கை, என்னுடைய பொருள்-அது, உடைய-ஆறன் உருபுகள். கண்ணா கொடு, முருகா செல்-எட்டாம் வேற்றுமையில் மிகாது. அவனா செய்தான் - ‘ஆ’ ஈற்று வினா அவனோ செய்தான் - ‘ஓ’ ஈற்று வினா. நானே செய்தேன்-ஈற்று ‘ஏ’ இடைச் சொல். ஓடு குதிரை, தாழ்குழல் - எந்த வினைத் தொகையிலும் மிகாது. இரவு பகல் படித்தான், கைகால் பிடித்தான்-உம்மைத்தொகை, மாதாபாசம்-தமிழ் எழுத்துருவம் பெற்ற வடமொழித் தொடரில் மிகாது.

பதினெட்டு மெய்யெழுத்துக்களுள் ய் - ர் - ழ் என்னும் மூன்றில் தவிர, மற்ற பதினைந்து மெய்யெழுத்துக்களுள் எதன் பக்கத்திலும் இன்னொரு மெய்வராது. எனவே, கற்க்கண்டு, நட்ப்பு, ஆட்ச்சி என்றெல்லாம் எழுதுதல் தவறு.

குறுக்கு வழி

நன்னூல் நூற்பாக்களை மறந்து, அவற்றிலிருந்து எடுத்த ஒரு பிழிவாக ஒரு குறுக்கு வழி காண்பாம். பொதுவாக எந்த ஈற்றில் முடியும் அஃறிணைப் பெயர்ச் சொற்கட்கும் பின்னே - சிறப்பாக ‘இ’ ஈற்றிலும் ‘ஐ’ ஈற்றிலும் முடியும் அஃறிணைப் பெயர்ச் சொற்கட்குப் பின்னே, வருமொழியில் பெயர்ச் சொல்வரின் இடையே வல்லொற்று மிகும். வருமொழியில் வினைச் சொல் வரின் இடையே ஒற்று மிகாது. சில எடுத்துக்காட்டுகள் வருக;- அரிசிச்சோறு, மலைப்பாதை, வரகுக் கஞ்சி, தாய்ப்பால், யாழ்க்கம்பி - வருமொழியில் பெயர்ச்சொற்கள் வந்ததால் வல்லிமிக்கது.

அரிசி போட்டார், மலைகண்டான், வரகு தந்தார், தாய் பேசினாள், யாழ் கொடுத்தார் - வருமொழியில் வினைச்சொற்கள் வந்ததால் ஒற்று மிகவில்லை.