பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

211


நிலைமொழி ஈற்று இகர உயிரையும், வருமொழி முதலில் உள்ள ஒகர உயிரையும் உடம்படுத்த (இணைக்க) ‘ய்’ என்னும் மெய் இடையே வந்துள்ளது.

நிலா + ஒளி = நில் ஆ + ஒளி = நில் ஆ + வ் + ஒளி = நிலாவொளி. இங்கே நிலைமொழி ஈற்று ஆகார உயிரையும் வருமொழி முதலில் உள்ள ஒகர உயிரையும் இணைக்க ‘வ்’ என்னும் மெய் வந்துள்ளது. நாம் ஒலிக்கும் போது, நம்மையும் அறியாமல், ய் என்பதோ, வ் என்பதோ ஓடி வந்து இடையில் விழுகிறது.

இரண்டு உயிர்களை இணைக்க இடையிலே மெய் வருவது ஆங்கிலத்திலும் ஓரளவு உண்டு. ஒரு பூனை என்பதற்கு ஆங்கிலம் A cat என்பதாகும். இவ்வாறு ஒரு விலங்கு என்பதற்கு A animal என்று எழுதலாகாது. ஏனெனில், உயிர் எழுத்தாகிய, A என்னும் ஓரெழுத்து மொழிமுன், a என்னும் உயிர் முதல் வருமொழியாகிய animal வந்திருப்பதால், இடையிலே ‘n’ என்னும் மெய்யெழுத்து இட்டு An animal எனல் வேண்டும். a, e, i, o, u, என்னும் ஐந்தும் ஆங்கிலத்தில் உயிர் எழுத்துகள். (இலத்தீனில் ‘y’ என்பதும் சேர்த்து உயிர் ஆறாகும். ஆங்கிலத்திலும் copy முதலிய சில சொற்களில் y உயிரெழுத்தாக ஒலிக்கும்.)

ஆங்கிலத்தில் an animal, an egg, an idea, an ocean, an umbrella என a என்பதையும், a, e, i, o, u, என்னும் உயிரெழுத்துக்களையும் இணைக்க இடையிலே N என்னும் மெய் வந்துள்ளமையைக் காணலாம்.

A union என்பனவற்றை இணைக்கும்போது An union என்று இடையில் N இட்டு இணைக்கலாகாது. இங்கே ‘U’ என்பது, umbrella என்பதில் ‘அ’ என்ற உயிர் போல் ஒலிப்பதுபோல் இன்றி, யூனியன் என யூ என்னும்