பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

சுந்தர சண்முகனார்


(ய் + ஊ) மெய்யெழுத்தாக ஒலிப்பதால், A union என்று தான் எழுதல் வேண்டும்.

ஆனால், ஒரு மணி நேரம் என்னும் பொருளில் ‘An hour’ என்று எழுதுகிறார்களே - இங்கே வருமொழி முதலில் உயிர் இன்றி, ‘h’ என்னும் மெய்யல்லவா உள்ளது? - என்று வினவலாம். hour என்பதில் h என்பதற்கு ஒலிப்பே இன்றி, ‘அவர்’ என உயிர் முதல் வருமொழிபோல் ஒலிப்பதால் An hour என எழுதுகின்றனர்.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என்னும் மும்மொழிகளிலிருந்து தந்த எடுத்துக்காட்டுகளால் தெரிய வருவதாவது: புணர்ச்சி விதி என்பது, மக்களின் பேச்சு வழக்காற்றை ஒட்டியே எழுந்ததாகும் என்பது.

1-8-5 பொருந்துவனவும் பொருந்தாதனவும்

எனவே, கல்லடி, காலடி, பத்தடி, மணியோசை போன்ற எளிய புணர்ச்சி விதிகளை வைத்துக் கொள்ளலாம். முட்டாட்டாமரை, கடறாவு படலம் போன்ற வலிய புணர்ச்சிகளைப் பின்பற்றாமல் விடலாம். மற்றும், ஒன்பது + பத்து என்பன சேர்ந்து தொண்ணூறு எனவும், ஒன்பது + நூறு என்பன சேர்ந்து தொள்ளாயிரம் எனவும் ஆனதாகக் கூறும் பொருளற்ற புணர்ச்சி விதிகளை அறவே அகற்றி விடலாம். ஏனெனில், ஒன்பது பத்து - ஒன்பது பத்து என ஆயிரம் முறை கூறினும் தொண்ணூறு என்னும் தொகுப்பொலி கிடைக்காது. ஒன்பது நூறு - ஒன்பது நூறு எனப் பதினாயிரம் முறை கூறினும் தொள்ளாயிரம் என்னும் தொகுப்பொலி கிடைக்காது. அதே நேரத்தில், கல் அடி, கால் அடி என்பவற்றை, கல் அடி - கல் அடி = கல்அடி, கால் அடி - கால் அடி = காலடி என ஓரிரு முறை கூறினாலுமே கல்லடி, காலடி என்னும் தொகுப்பொலிகள் கிடைக்கின்றன. எனவே, தொண்ணூறு,