பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

217


அறை என்பதற்கு Student's Room என்று எழுதவேண்டும். மாணவர்களின் விடுதி என்பதற்கு Student’s Hostel என்று எழுதவேண்டும். அதாவது உடையவரைக் குறிக்கும் நிலை மொழி ஒருமையாயிருப்பின், ‘S’ என்னும் ஆறாம் வேற்றுமை உருபை ‘S’ என முன்னால் ‘எழுத்தெச்சக் குறி’ (Apostrophe) போட்டு எழுதவேண்டும். நிலைமொழிப்பெயர் பன்மையாயிருப்பின், S’ என S என்பதற்குப் பின்னால் ‘எழுத்தெச்சக் குறி’ போடவேண்டும். நாற்காலியின் கால்கள் என உடைய பொருள் அஃறிணையாயின் chair's legs என எழுதலாகாது. legs of the chair என உடைமைப் பொருளை முன்னும் உடைய பொருளைப் பின்னும் எழுதி இடையிலே of என்னும் ஆறாம் வேற்றுமை உருபை அமைத்தல் வேண்டும்.

தமிழில் உடைமைப் பொருள் அஃறிணையா உயர் திணையா - ஒருமையா பன்மையா என்று கருதப்படுகிறது. ஆங்கிலத்திலோ, உரிய பொருள் அஃறிணையா உயர் திணையா - ஒருமையா பன்மையா என்பது கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மாறுதல் செய்யாவிடினும், தமிழிலாவது செய்யலாமா - என அறிஞர்கள் ஆய்க.

1-11 புதுப்பித்தல்

இது காறும் சொல்புணர்ச்சி தொடர்பாக யான் கூறிய சில புதிய செய்திகளைப் புதிய தமிழில் சேர்ப்பதாக யான் எண்ணவில்லை. வழிவழி வரும் தமிழிலேயே இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் என்றே கருதுகிறேன். உரையாசிரியர்கள் புதிய புதிய கருத்துகளையும் எடுத்துக் காட்டுகளையும் சேர்த்துச் சேர்த்துச்சூடு ஆற விடாமல் செய்து தமிழைப் புதுப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால், இதை, தெனாலி ராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக ஆக்க முயன்றதுபோல், பழைய தமிழைப்