பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

219


எனில், இயல்பாயும் இருக்கலாம் - மிக்கும் இருக்கலாம் - இதனை விகற்பமாகக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.

2-2 எனல்

“பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்” (குறள் - 196)

என்னும் குறளில், முதலில் உள்ள ‘எனல்’ என்பதற்கு ‘என்று சொல்லாதே (சொல்லற்க)’ என்பது பொருள். இறுதியில் உள்ள ‘எனல்’ என்பதற்கு ‘என்று சொல்லுக’ என்பது பொருள். இங்கே ‘அல்’ என்பது வியங்கோள் வினைமுற்று விகுதி. எனல் என்பதை உடன்பாட்டுப் பொருளில் சொல்லும் போது, (என் + க) என்க என்பது போல் என் + அல் = எனல் என்றாகிறது. எதிர்மறைப் பொருளில் சொல்லும்போது, என் + அல் என்பவற்றின் இடையே ஏதோ ஓர் எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டதாகச் சிலர் கூறுவர். இது பொருந்தாது. அதட்டிப் பேசும் ஒலிக்குறிப்பு இங்கே எதிர்மறைப் பொருள் தருவதல்லாமல், ‘அல்’ என்னும் விகுதியில் அன்மைப் பொருளும் மறைந்திருப்பதாகக் கொள்ளல் வேண்டும்.

2-3 புணர்ந்து கெடுதல்

புணர்ந்து கெடுதல் என்பது எண்ணத்தக்கது. சில இடங்களில் விகுதி புணர்ந்து கெட்டது எனக் கூறுவர். இது பொருந்தாது. புணர்வது ஏன்? பின் கெடுவது ஏன்? செய், உண் என்னும் முன்னிலை ஏவல் ஒருமை வினை முற்றில், ‘ஆய்’ என்னும் விகுதி புணர்ந்து பின் கெட்டதாகக் கூறுவர். அந்தோ இவர்கள் எளியர்! முதலில் புணர்வதும் பின் கெடுவதும் ஏன்? இங்கே விகுதியின்றிப் பகுதியே ஏவலைச் செய்கிறது. இன்னும் கேட்டால்,