பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

சுந்தர சண்முகனார்


செய்வாய் என்பதனினும் ‘செய்’ என்பதில், ஏவல் அழுத்தம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

மற்றும் உண் என்பது, ஐ விகுதி புணர்ந்து கெட்டு முதல் நீண்டு ‘ஊண்’ என்றாயிற்று எனவும், திரை என்பதில் ‘இ’ விகுதி புணர்ந்து கெட்டதாகவும் உரையாசிரியர்கள் சிலர் கூறுவது மிகவும் இரங்கத்தக்க நிலையாகும்.

வியங்கோளில் இக்காலத்தில் ‘அல்’ விகுதி பயன் படுத்தப்படுவதில்லை. வாழ்க போல் வாழிய என்பது உண்டு. வாழியர் என்னும் வழக்கு குறைந்துவிட்டது. அதாவது, ‘இயர்’ என்னும் வியங்கோள் விகுதி அருகி விட்டது.

2-4 அல்ல

இந்த வேலையைச் செய்த வினைமுதல் அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், அது அன்று, அவை அல்ல என்று எழுதவேண்டும் என்கின்றனர். அதாவது பால் விகுதிகள் போட்டு எழுதவேண்டும். ஆனால், பலர், அவன் அல்ல - அவர் அல்ல - அது அல்ல - அவை அல்ல என்றே எழுதுகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், அவன் இல்லை, அவள் இல்லை, அவர் இல்லை, அது இல்லை, அவை இல்லை என்று கூறும் ‘இல்லை’ என்ற பொதுச் சொல்போல அல்ல என்பதைக் கொள்ளல் வேண்டும்.

2-5 எல்லாரும்

நாங்கள் எல்லேமும் படித்தோம், நீவிர் எல்லீரும் படிப்பீர், அவர்கள் எல்லாரும் படிப்பார்கள் என, தன்மைப் பன்மையை எல்லேமும் என்பதாலும், முன்னிலைப் பன்மையை எல்லீரும் என்பதாலும், படர்க்கைப் பன்மையை