பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

சுந்தர சண்முகனார்


பொருள் கொள்ளின் ‘கை’ விகுதியும், உடுக்கப்படும் உடை எனச் செயப்பாட்டு வினைப்பொருள் கொள்ளின் ‘ஐ’ விகுதியும் இருப்பதாகக் கொள்ளப்படுகின்றன.

கால விகுதிகள்

ஒரு வினை முற்றில் முதல் நிலையாகிய பகுதியின் வேலை வினை அதாவது செயல் இன்னது என்பதை அறிவிப்பது. இடையில் உள்ள இடை நிலையின் வேலை காலத்தை அறிவிப்பது. இறுதியில் நிற்கும் விகுதியின் வேலை வினைமுதலை (வினை செய்தபொருளை) உணர்த்துவது. செல்கிறான் என்பதில், செல் என்னும் பகுதி செல்லுதல் என்னும் செயலையும், கிறு என்னும் இடைநிலை நிகழ்காலத்தையும், ஆன் என்னும் விகுதி செய்கிறவன் ஓர் ஆண்மகன் என்னும் வினை முதலையும் அறிவிக்கின்றன. சில வினை முற்றுகளில், இடைநிலை செய்யும் காலம் காட்டும் வேலையை விகுதிகளே செய்து விடுகின்றன.

2-8-1 கும்டும்

உண்கு - உண்கும் - கு, கும் எதிர்காலம் காட்டுகின்றன. சென்று - சேறும் - று, றும் முறையே இறப்பும் எதிர்வும் காட்டுகின்றன. வந்து - வருதும் - து, தும் முறையே இறப்பும் எதிர்வும் அறிவிக்கின்றன. உண்டு - உண்டும் - டு, டும் இறந்த காலம் அறிவிக்கின்றன. இவ்விகுதிகள் இப்போது அருகிவிட்டன.

2-8-2 செய்யும் முற்று

‘உம்’ விகுதி ஏற்ற செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலமும் எதிர்காலமும் காட்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இது எதிர்காலம் காட்டும் என்பதே பொருத்தம். எப்போதும் நிலையாயுள்ளதைக் குறிக்கும்