பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

223


பொருளிலும் இது வரும். எ. கா: தண்ணீர் குளிரும்; நெருப்பு சுடும்.

2-8-3 செய்யும் பெயரெச்சம்

வேலை செய்யும் பையன், என்பதில் உள்ள செய்யும்’ என்னும் பெயரெச்சத்தின் விகுதியாகிய ‘உம்’ என்பதும் எதிர்காலம் காட்டும்.

செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றும் இன்னதே. மலையாள மொழியில் ஒரே வினைமுற்று உருவம் எல்லாப் பாலுக்கும் வருவது போன்றது இது. அவன் வரும், அவள் வரும், அது வரும், அவை வரும் என நான்கு பால்கட்கும் பொதுவாய் நிற்கும் இந்த நிலை, இலக்கணம் கல்லாதார்க்குக் குழப்பம் விளைவிக்கும். எனவே, இந்த அமைப்பை நீக்கவும் செய்யலாம்.

2-9 வினையெச்ச விகுதிகள்

இறுதியாக வினையெச்ச விகுதிகளை நோக்கிச் சென்று பயணத்தை முடிக்கலாம். அவன் ஊணை விழுங்கா உறுபசி நீக்கினான் - என்பதில் உள்ள ‘விழுங்கா’ என்பது எதிர் மறைபோல் சொன்மைக்குத் தெரிகிறது. ஆனால், அதற்குப் பொருண்மையில் ‘விழுங்கி’ எனப் பொருள் கொள்ளல் வேண்டும். எதிர்மறைபோல் இருப்பதற்கு உடன்பாட்டுப் பொருள் கொள்வது பற்றிச் சிலர் வியப்படைகின்றனர். இதற்குச் ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் என்று பெயர் கூறுவர்.

2-9-1 வினையெச்ச வாய்பாடுகள்

வினையெச்சத்திற்குச் செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர், செயற்கென முதலிய வாய்பாடுகள் உரியனவாகச் சொல்லப்பட்