பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

225


யெச்சம் எனப்படும். நீர் பாய்ச்சிய காரணத்தால்தானே நெல் விளைந்தது? நீர் பாய்ச்சிய பின் நெல் விளைந்ததால், ‘பாய்ச்ச’ என்பது இறந்த காலப் பொருளுடையது என்றும் கூறலாம்.

2-9-2-2 காரியப் பொருள் - எதிர்வு

நெல் விளைய நீர் பாய்ச்சினார் என்பதில் உள்ள ‘விளைய’ என்னும் செய வாய்பாடு, காரியப் பொருளில் உள்ள வினையெச்சம் எனப்படும். நெல் விளைந்தாக வேண்டிய காரியத்திற்காகத்தானே நீர் பாய்ச்சப்பட்டது. இனி எதிர் காலத்தில் நெல் விளைவதற்காகத்தானே நீர் பாய்ச்சினார்கள்? எனவே, ‘விளைய’ என்பது எதிர்கால வினையெச்சப் பொருளில் உள்ளது.

2-9-3 செய்யி வாய்பாடு

வினையெச்ச வாய்பாடு தெரிவித்தவர்கள், 'இ’ என்னும் விகுதியில் முடியும் வினையெச்ச வாய்பாடு பற்றி ஒன்றும் கூறவில்லை. இது இறந்த காலம் குறிப்பதாகும். ஓடிப் போனான், விழுங்கி விட்டான், வருந்தி இருந்தான் - என்பவற்றில் உள்ள ஓடி, விழுங்கி, வருந்தி என்பன ‘இ’ என்னும் விகுதி கொண்ட இறந்த கால வினையெச்சங்களாகும். இவற்றை, ஓடு + இ = ஓடி, விழுங்கு + இ = விழுங்கி, வருந்து + இ = வருந்தி எனப் பகுதியும் விகுதியுமாகப் பிரிக்கலாம். எனவே, இவற்றிற்குச் ‘செய்யி’ என்னும் வாய்பாடு என்று பெயர் சூட்டலாம். செய் + இ = செய்யி. ஆ ஊ சேர்த்து செய்யா, செய்யூ என்னும் வாய்பாடு அமைத்தவர்கள் செய் + இ = செய்யி என்ற வாய்பாட்டை அமைக்காதது வியப்பாயுள்ளது.

உகரம் கடதற ஊர்ந்து இயல்பாயும், ஏனை எழுத்து ஊர்ந்து இகரமாய்த் திரிந்தும், நெடிலீற்று முதனிலை