பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

231


முன்றில் போகா முதிர்வினள் யாயும்
பசந்த மேனியொடு படரட வருந்தி
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்து தின வாடிய முலையள் பெரிதழிந்து,
குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீர் உலையாக ஏற்றி மோரின்று
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம்பழியாத்
துல்வா ளாகிய என்வெய் யோளும்
என்றாங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப” (159:1-15)

என்பது பாடல் பகுதி. குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடிய அடுத்த பாட்டிலும் இந்த நிலையைக் காணலாம்.

வீட்டில் உணவு இல்லாமையால் குழந்தைச் சிறுவன் வீட்டை மறந்து வெளியிலேயே இருந்தான். எவ்வளவு நேரந்தான் பசியோடு வெளியில் இருக்க முடியும்? அம்மாவிடம் பால் குடிக்கலாம் என்று வந்து தாயின் பால் இல்லாத வற்றிய முலையைச் சுவைத்துப் பார்த்தான்; பால் வரவில்லை. கூழாவது சோறாவது இருக்குமா என்று உணவுக் கலங்களை (பாத்திரங்களை) யெல்லாம் முறையாகத் திறந்து திறந்து பார்த்தான்; ஒன்றும் இல்லை. உடனே பசி தாங்காமல் அழத் தொடங்கி விட்டான். அவனது அழுகையை நிறுத்தத் தாய் என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்க்கிறாள்: ‘அதோ புலி வருகிறது - நீ அழுதாயானால் அது பிடித்துக்கொண்டு போய்விடும்’ என்று சொல்லிப் பார்த்தாள் முடியவில்லை. அதோ நிலா பார் - எவ்வளவு அழகாயிருக்கிறது பார்’ என்று நிலாவைக் காட்டினாள் - அழுகை நிற்கவில்லை. ‘அப்பா இப்படித்தான் இருப்பார் என்று அப்பாபோல் நடித்துக் கோணங்கி காட்டுவாயே - அதுபோல் இப்போது காட்டு