பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

சுந்தர சண்முகனார்


நாடகமே முந்தியது. தொடக்கக் காலத்தில் அதாவது எழுதப்படிக்கத் தெரியாத காலத்திலேயே - எழுத்து கண்டு பிடிக்காத காலத்திலேயே கூத்து அதாவது நாடகம் வழக்கத்தில் இருந்தது. பின்னர், நடித்த நாடகங்கள் எழுதப்பட்டன. பின்னர், எழுதப்பட்ட நாடகங்கள் நடிக்கப்பட்டன. இங்ஙனமாகப் பாடலும் நடிப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருந்தன.

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்” (குறள் - 706)

என்றபடி, அகத்தில் (மனத்தில்) உள்ளதை முகத்தில் தெரியும் குறிகளால் அறிவதன்றி, மற்ற மெய்யுறுப்புகள் செய்யும் செயலினாலும் அகத்தில் உள்ளதை அறிந்து கொள்ளலாம். அதாவது, அகத்தில் உள்ளதை, மெய்யில் (உடம்பில்) தெரியும் குறிகளாலும் செயல்களாலும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அகத்தில் உள்ளதை மெய்யின் செயல்பாடு கொண்டு அறிந்து கொள்வதற்கு மெய்ப்பாடு (மெய்+பாடு = மெய்யில் படுவது - தெரிவது) என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

புறநானூற்றுப் பாடலில், முதியோர் பல புலந்தாள், குறும்பல ஒதுங்கினாள், கண்துயின்றாள், மூன்றில் போக முடியாதாள் எனக் கூறப்பட்டிருப்பன முதுமையால் ஏற்பட்ட மெய்ப்பாடுகளாகும்.

புலவரின் மனைவி தொடர்பாகக் கூறப்பட்டுள்ள பசந்த மேனி, படர் அட வருந்தி, வாடிய முலையள், பெரிது அழிந்து, முற்றா இளந்தளிர் கொய்து, உப்பு இன்று, நீர் உலையாக, மோர் இன்று, அவிழ்ப்பதம் மறந்து, அடகு மிசைந்து, மாசொடு, குறைந்த உடுக்கையள், அறம் பழியா, துவ்வாள் என்பன வறுமை காரணமாக ஏற்பட்ட மெய்ப்பாடுகளாகும்.