பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

33


ஒத்திகைகள் போட்டுப் பார்த்திருப்பர். இவ்வொத்திகைகள் போன்றே இவ்வொரு உலகத்திற்கும் ஐக்கிய நாட்டவை உள்ளது. மற்றும், ஆசிரியர்க்காகப் பயிற்சிகள் நம் பள்ளியில் தரப்படுகின்றன. இத்தகைய ஒத்திகைகள் - பயிற்சிகள் போன்றே ஒரே யுலகத்திற்கும் ஒத்திகையாக - இருப்பது ஐக்கிய நாட்டவை!

எனவே நடிகர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எங்ஙனம் ஒத்திகை, பயிற்சி தொடர்பு கொண்டுள்ளனவோ அதைப் போல ஒரே யுலகத்திற்கும் ஐக்கிய நாட்டவைக்கும் தொடர்புண்டு!

ஆகவேதான், இப்பொருள்பற்றிப் பேசுவது இவ்வகைக்குப் பொருந்துமெனத் தெரிந்து எடுத்துக் கொண்டேன்.

ஒரே உலகு தேவைதானா? இக் கருத்து எவ்வாறு பொருந்தும்?

காட்டாக, ஒருவன் நோயால் வாடுகிறான். ஒருவன் பட்டினியால் வருந்துகிறான். இன்னவர்களுக் கெல்லாம் மற்றவர் உதவிகள் மிகமிகத் தேவை. ஒற்றுமையிருந்தால் தான் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளமுடியும். அதைப் போல ஒரு நாடு மற்றொரு நாட்டின் உதவியின்றி வாழ்வதென்பது இயலாத காரியம். எந்தவொரு நாட்டின் சிறு உதவியாவது தேவை. ஒரு சுமையான கல்லை ஒருவரால் தூக்கவியலாது. பலர் முயன்றால் தான் முடியும். அதைப் போன்று எல்லா நாடுகளும் ஒன்றுபட்டு ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டால் தான் இவ்வுலகம் உருப்படும்.

இன்று பர்மா, இலங்கை போன்ற ஊர்களுக்கும் அனுமதிச் சீட்டின்றிப் போகமுடியாது. “ஏன் அனுமதிச் சீட்டின்றிப் போகக்கூடாது? நான் இந்த உலகத்தில் தானே பிறந்தவன்? இவ்வுலகம் எனக்குச் சொந்த