பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

35




1) அரசாங்க அச்சம்: ‘நாம் நியாயம் தவறி நடந்தால் அரசாங்கம் நம்மைத் தண்டிக்குமே’ என்றவொரு காரணத்தால் மனிதன் தீச்செயல் புரிவதற்கு அஞ்சுகின்றான், இவ்வச்சத்தின் பயனாகவும் நல்லவனாக நாட்டில் மதிக்கப்படுகிறான்.

2) சமூக அச்சம்: நாம் தவறு செய்தால் நாடு நம்மைத் தூற்றுமே! சமூகத்தினின்றும் நம்மை ஒதுக்கி விடுமே! அதன் உதவிகள் நமக்குக் கிட்டாவே’ - என்ற காரணத்தாலும் மனிதன் தவறு புரியாமல் இருக்கின்றான். இக்காரணத்தால் அஞ்சுகிறவர்கள் அரசாங்கத்திற்கு அஞ்சுபவரைக் காட்டினும் சிறிது எண்ணிக்கையில் குறைந்தவர்களே!

3) கடவுள் அச்சம்: ‘தீமைகள் புரிந்தால் நம்மை இறைவன் தண்டிப்பாரே’ என்ற காரணத்தால் தவறுகள் செய்வதற்கஞ்சுபவரும் நாட்டில் இருக்கிறார்கள்.

மேற்கூறிய இருவித அச்சங்களைக் காட்டினும் இவ்வச்ச முள்ளவர்கள் மிகக்குறைவு.

4) மனச்சான்று அச்சம்: இதுவரை கூறியதைவிட இக்காரணத்தால் அஞ்சுபவர் மிகமிகக் குறைவு. ‘தவறுகள் செய்தால் நம் மனச்சான்று நம்மை உறுத்திக் கொண்டிருக்குமே’ என்ற காரணத்தாலும் நல்லவர்களாக இருக்க முயலுகிறார்கள் சிலர்.

தவறு செய்யும்போதும் செய்த போதும் செய்யப் புகும் போதும் மனமானது “நீ தவறுகிறாய்! நான் உன்னை மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுப்பேன்!” என்று அச்சுறுத்துகிறது. இங்ஙனம் செய்வதால் மனத்திற்கு அஞ்சிச் சிலர் நல்லவர்களாக நடக்க முற்படுகிறார்கள். இவ்வாறு அடிக்கடி (தவறுகள் செய்யும் போதெல்லாம்)