பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

49


யன்று ஒளி சிறிதும் இராது. பிறை, நாளுக்கு நாள் ஒளி வளரும் காலப் பகுதியை வளர்பிறை என்றும், நாளுக்கு நாள் ஒளி தேயும் காலப் பகுதியைத் தேய்பிறை என்றும் கூறுவர். ஞாயிறு, பூவுலகு, நிலா ஆகியவை சுற்றுவதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது.

நன்மங்கல வினைகளை வளர்பிறையில் தொடங்கினால்தான் வளர்ச்சி கிடைக்கும் எனவும், தேய்பிறையில் தொடங்கின் தளர்ச்சியே கிடைக்கும் எனவும் மக்கள் நம்புகின்றனர்.

அந்தக் காலத்தில் இரவில் விளக்கு வசதி கிடையாது. நிலா ஒளி உள்ள நாட்களில் இரவிலும் மக்கள் தொடர்ந்து செயலாற்ற முடிந்தது. முன்னிரவில் நிலா ஒளி இல்லாத நாட்களில் அவ்வாறு செயலாற்ற இயலவில்லை. அதனால், தேய் பிறையில் தொடங்காமல் வளர் பிறையில் தொடங்கும் வழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்தக் கொள்கை ‘சாத்திர சம்பிரதாயம்’ என்னும் பெயருக்கு உட்பட்டு விட்டது.

எந்தக் காலத்திலும், வானத்தில் நிலா இருப்பின் பூவுலகு பொலிவு பெறுகிறது. நிலா இல்லாத காலத்தில், பிள்ளையில்லாத இல்லம் போன்றது எனப் புலவர்கள் தாழ்த்திக் கூறும் அளவுக்கு வானம் ஆகிவிடுகிறது. நிலா உள்ள வானமே பொலிவாயிருப்பதால், பாவேந்தர் நிலாவையும் வானத்தையும் இணைத்துக் கூறியுள்ளார். ஞாயிற்றைச் செஞ்ஞாயிறு என்பதால், நிலா வெண்ணிலா எனப்படுகிறது. இதைத்தான் கவியரசர் ‘வெண்ணிலாவும் வானும் போலே’ என்றார். இது பாடலின் முதல் பகுதி. அடுத்து இரண்டாம் பகுதி வருக:

வீரனும் கூர்வாளும்

இந்தக் காலத்தில் போர் மறவர்கட்குத் துப்பாக்கி படைக் கருவியா யிருப்பது போல, அந்தக் காலத்தில் வாள் படைக் கருவியாய்ப் பயன்பட்டது.