பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

53


அவற்றின் திறங்களும் நுண்ணிதின் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன. யாழ் நரம்பின் துணை கொண்டு ஆராய்ந்து கண்ட பண்வகைகள் ‘யாழின் பகுதி’ எனப்படும், அப்பண்களின் இயல்பினை விளக்கும் இசை நூலை ‘நரம்பின் மறை’ என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். மகர யாழ் பற்றிய ஆட்சி பல நூல்களின் இடம் பெற்றுள்ளது. மணிமேகலையில்,

“தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான்கோடு தழீஇ” (4-55,56)

எனவும், மேருமந்திர புராணத்தில்,

“மகர யாழ் வல்ல மைந்தன் ஒருவனைக்கண்ட மத்தப்
புகர் முகக் களிற்றின்...” (வச்சிராயுதம்-31)

எனவும் மகர யாழ் இடம் பெற்றுள்ளது. இவற்றைக் கொண்டு, இசைக்கு, மற்ற கருவிகளைவிட யாழோடு தொடர்பு நெருக்கம் என்பது பெறப்படும். எனவேதான், மகர யாழும் இசையும் போலே’ என்றார் பாவரசர்.

கண்ணும் ஒளியும்

இது பாடலின் ஐந்தாம் பகுதி. கண்கள் இருப்பினும், எந்த ஒளியும் சிறிதும் இல்லையேல், கண்கள் எதையும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது. எவ்வளவோ மிக்க பேரொளி இருப்பினும், கண்கள் இல்லையேல் - குருட்டுக் கண்களால் எப்பொருளையும் பார்த்தறிதல் இயலாது. பொருள்களைக் காணும் நிலையில் கண்கட்கும் ஒளிக்கும் உள்ள இணைபிரியாத் தொடர்பினால், “கண்ணும் ஒளியும் போலே” என்று பாடினார் பாவேந்தர்.

கன்னல் தமிழும் கவியரசரும்

பாடலின் ஆறாம் பகுதி ‘கன்னல் தமிழும் யானும்’ என்பது. தமிழ் கன்னல் தமிழாம். கன்னல் என்பதற்கு,