பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

63


தொழிலாளர் படும் தொல்லையைக் கண்டு அது சிவந்திருக்குமோ என எண்ணிச் சுற்று முற்றும் பார்த்தளாம். தோணியைச் செலுத்தும் தொழிலாளர்கள் படும் தொல்லையைக் கண்டு நெஞ்சம் துடித்தாளாம். அது தொடர்பான இரு பாடல்கள் வருமாறு:-

“தோணிக் கயிற்றினை ஓர் ஆள் - இரு
தோள்கொண் டிழுப்பது கண்டோம்
காணச் சகித்திடவில்லை - அவன்
கரையொடு நடந்திடு கின்றான்
கோணி முதுகினைக் கையால் - ஒரு
கோல் துணியால் இலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
தொல்லை யுற்றான் பின்புறத்தில்”-

“இந்த உலகினில் யாரும் - நல்
இன்ப மெனும் கரை ஏறல்
சந்த்தமும் தொழி லாளர் - புயம்
தரும் துணை யன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை - இதை
இருபது தாம் சொன்னோம்
சிந்தை களித்த நிலாவும் - முத்துச்
சிந்தொளி சிந்தி உயர்ந்தான்”-

இந்தப் பகுதியைச் சேர்ந்த பத்துப் பாடல்களுமே பத்தாயிரம் பாடல்கட்கு ஒப்பாகும். கவிஞரின் இலக்கியச் சிறப்பிற்கும் சமுதாய நோக்கிற்கும் இதனினும் வேறு சான்று வேண்டுமா?