பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

சுந்தர சண்முகனார்


பகைவர்க்கு எளிதில் வெற்றி வாய்ப்பை உண்டாக்கி விடலாம்.

ஆராயாமல் ஆர அமர எண்ணிப் போர் தொடுப்பது எப்போது என்றால், பகைவர் திடீரெனப் படையெடுத்து வந்துவிட்ட போதாகும். பகைவர் படை தம் ஊருக்குள் எதிர்பாராது புகுந்துவிட்டபோது, மணிக்கணக்கில் - நாள் கணக்கில் பலரும் அமர்ந்துகொண்டு என்ன செய்யலாம் - எவ்வாறு செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டிருத்தலாகாது. இந்தச் சூழ்நிலையில் நேரத்தை நீட்டினால், ‘அரசன் சிங்காரிப்பதற்குள் பட்டணம் பறிபோய் விடும்’ என்னும் பட்டறிவு மொழிக்கு ஏற்பத் தோல்வியையே தழுவ நேரிடும். இத்தகைய சூழ்நிலையில், Quick Decision விரைந்து முடிவெடுத்தல், Quick Action - விரைந்து செயல்படுதல், Quick Result - விரைந்த பயன் என்ற முறையில் உடனே செயல்பட வேண்டும். ஆனால், இது போன்ற உடனடிச் சூழ்நிலை இல்லாத காலத்தில், அரசுத்தலைவரும் அமைச்சர்களும் படைத் தளபதிகளும் நன்கு ஆய்ந்து முடிவெடுத்த பின்னரே செயலில் இறங்கவேண்டும். வெற்றி பெறாவிடினும் தோல்வி அடையாமலாவது சரி நிகர் சமமாய் இருக்கவேண்டுமல்லவா?

உறவு கருதியோ - நீண்ட நாள் நட்பு கருதியோ, தகுதி யற்றவரை ஆராயாது செயலில் ஈடுபடுத்தலாகாது. இவர்கட்கு வேண்டுமானால் ஏதாவது உதவி செய்யலாம். மற்றப்படி சிறந்த செயல் செய்வதற்கு, உறவு - நட்பு - சாதி - சமயம் என்பவற்றைப் பார்க்காமல், எவர் நன்கு செயல் ஆற்றுவார் என்பதைத் தேர்ந்தறிந்து அவரிடமே செயலை ஒப்புக் கொடுக்கவேண்டும்.

ஆராயாது கண்டவரைச் செயலில் ஈடுபடுத்தினால், அவர்கள் மறைமுகமாகத் தாம் பொருள்சேர்த்துக் கொண்டு