பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

95


பறை கொட்டுபவன் பறையன். திருவிழாவில் கடவுள் திருமேனி தெருவில் உலா வரும்போது, முதலில் பறை மேளம் இடம் பெறுகிறது; அடுத்து நாயன (நாதசுர) மேளம் இடம் பெறுகிறது. இதில் உயர்வு-தாழ்வு என்ன? வண்ணான் - பரியாரி என்பன தாழ்வாம். வண்ணான் எனினும் சலவைத் தொழிலாளி எனினும் பொருள் ஒன்றே. உடையை வண்மை (தூய்மை) செய்பவன் வண்ணான். மலையாளத்தில் மண்ணான் என்பர். மண்ணுதல் என்றால் தூய்மை செய்தல். பரிகாரம் என்றால் மருத்துவம். பரிகாரி = மருத்துவன். இப்பெயர் கொச்சையாகப் பரியாரி எனப்படுகிறது. இது உயர்ந்த பெயர். மீனவர் என்ப தனினும் செம்படவர் என்னும் பெயரே சிறந்தது. மீனவர் என்றால் மீன் பிடிப்பவர். செம் படகர் என்பதே செம்படவர் என்றாயிற்று. செம் படகு ஓட்டுபவர் செம்படகர். படவு என்பது தமிழில் கொச்சை உருவம். படவ என்பது தெலுங்கில் எழுத்து மொழி. செம் படவ(க)ர் என்பதில் குறைவேயில்லை. இப்பெயர்கள் எல்லாம் பிற்காலத்தில் செயற்கையாகக் குறைவுப் பெயர்களாக ஆக்கப்பட்டன. சேரி என்பதும் இன்னதே என்பதற்காக இவ்வளவு எழுத வேண்டியதாயிற்று.

இவ்வாறாகப் பல சேரிகளைச் சேர்ந்த பல இனத்தவரும் சேர்ந்து வாழ்வதால்-அதாவது, புதிய முறையில் பல சேரியினரும் சேர்ந்து வாழ்வதால், இவ்வூர் புதுச்சேரி என்னும் அழகிய பெயரால் வழங்கப்படுகிறது.

6. தென் புதுவை

இங்கே புதுச்சேரி தொடர்பான மற்றொரு சிக்கல் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரான புதுச்சேரியைச் சுப்பிரமணிய பாரதியார் தமது குயில் பாட்டில்,