பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

125


முகாம்
சீவிலிபுத்துர்
7.8.49

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

முந்தாநாள் இரவு ரேடியோவில் தங்கள் பேச்சை எல்லாருமாகக் கேட்டோம். கலை விஷயமாக பலபல இடங்களைத் தொட்டுச் சொன்னீர்கள். நம்முடைய அதாவது தமிழ்நாட்டுக் கலையைப் பற்றி ஆவேசங்கொண்டே பேசினீர்கள். அந்த ஆவேசம் எங்களுக்கும் உண்டாயிற்று. மாமல்லபுரம், தென்காசி, சீவிலிபுத்துருமே எழுந்துவிட்டன கலைக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்ல.

முந்தாநாள் 5 மணி மாலை ரயிலில்தான் இங்கே வந்து சேர்ந்தேன். சேர்ந்ததும் நல்ல சகுனம் என்று சொல்லும்படியாக ரேடியோ பேச்சைக் கேட்க முடிந்தது. மிக்க சந்தோஷம்.

மகாராஜனும் அக்காள் வேலம்மாளும் இருக்கிற இடத்துக்கு நான் யாத்திரை போவது வழக்கம். அந்த வழக்கத்தை ஒட்டித்தான் வந்திருக்கிறேன். தமிழை அவர்கள் அனுபவிக்கிறதென்றால் அதோடு ஊறுகிறது என்றுதான் அர்த்தம். லகுவாகச் சொல்லாமல் பரையாமல் போய்விடுகிறது நேரம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை நேரத்தை ராஜபாளையத்துக்காரர் பிடுங்கிக் கொண்டார்கள். ராஜபாளையத்துக் கம்பர் கழகம் திறப்பு விழாவை இன்று கொண்டாடுகிறது. மகாராஜன் திறந்து வைக்கிறார்கள். நான் தலைமை வகிக்கிறேன்.

அதனால் சீவிலிபுத்துர் கலைக் கழகம் இன்று காலை 10 மணிக்குக் கூடி என்னைக் கேட்கப் போகிறது. விஷயம்