பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

ரசிகமணி டிகேசி


ரிதும் மேல்நாட்டாரைத் திண்டாட வைக்கிற காரியம். நாங்கள் இங்கே திண்டாட வேண்டியதாக ஒன்றும் இல்லை. ரிதும் பற்றி நான் பேச வேண்டாமே தமிழ்ப் பாடல்கள் பேசுமே தெளிவாக.

நாளைக் காலை குற்றாலம் திரும்புகிறேன்.

ராஜேஸ்வரியும் மாப்பிள்ளை நடராஜனும் காரைக்குடியில் செளக்கியமாக இருக்கிறார்கள் அல்லவா, கருணாகரனும் அங்கே தானே இருக்கிறான்.

தாங்களும் அம்மாளும் செளக்யந்தானே. வேலூர் உடம்புக்கு பிடித்திருக்கிறதல்லவா.

சென்னையிலிருந்தபோது வேலூர் வர எண்ணினேன். அங்கே கம்பர் கழகம் கல்கி அவர்களின் நிர்வாகத்தின் கீழ் ரொம்ப ரொம்ப வேலை செய்தது. என்னையும் வேலை வாங்கிற்று. நாலைந்து இடங்களில் கம்பரைப் பற்றிப் பேச நேர்ந்தது. வேலூருக்கு வர இயலவில்லை. வேலூர் தமிழ்க்குழாம் நன்றாய் உல்லாசமாய்த் தொண்டு செய்து கொண்டிருக்கும். அன்பர்களுக்கு என்னை ஞாபகப்படுத்த வேண்டும். -

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖