பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

149




திருக்குற்றாலம்
தென்காசி
7.10.53

அன்பான பாஸ்கரன் அவர்களுக்கு,

கடிதம் கிடைத்தது. ராஜேஸ்வரிக்குக் கழுத்து வலி தீர்ந்து சுகமாய் இருக்கிறாள் என்று எண்ணுகிறேன். மொத்தத்தில் உடம்பில் கொஞ்சம் பலகீனம் இருப்பதாகத் தெரிகிறது. சரியான போஷிப்பு கொடுத்து தேகத்தை சரியாக்க வேணும். மற்றும் அம்மா குழந்தைகள் எல்லாரும் சுகந்தானே.

கம்பர் தரும் ராமாயணம் பால அயோத்தியா காண்டம் முடிவடைந்துவிட்டது. அட்டவணைகளைப் போட்டுப் பூர்த்தி பண்ண வேண்டியது, பைண்டு கட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.

அரங்கேற்றுக்கு நவம்பர் மாசம் முதல் தேதியைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அன்றுதான் ராஜாஜிக்கு வசதி. செட்டிநாட்டுப் பிரமுகர்களுக்கும் நவம்பர் முதல் தேதி வசதி உங்களுக்குமே வசதி கலெக்டர் பழனியப்பாவும் கவர்னருக்கு விடைகொடுத்துவிட்டு வசதியாய் இருப்பார்கள். குற்றாலம் வருவதில் கஷ்டம் இராது.

கல்கி எடுத்த காரியம் எதிலும் வெற்றிதான். கல்கி எத்தனையோ காரியங்களை சாதித்திருக்கிறார்கள். கம்பர் யுகத்தையும் தாபிக்கிறார்கள். தமிழ்நாடு செய்த புண்ணியந்தான்.

பாட்டை நன்றாய் அனுபவித்திருக்கிறீர்கள். இதுவரை யாருக்கும் பாட்டு விளங்கினதில்லை. பண்டிதர்கள் என்ன சொல்லுகிறார்களோ? கபிலர் அகவல் தீபாவளி மலருக்குக் கொஞ்சம் அப்படி அப்படித்தான். கம்பரில் இருந்து ஒரு கட்டம்