பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

ரசிகமணி டிகேசி


அருமையாய் இருந்தது. பாரதியார் பாடல்களைப் பாடியது ராகபாவமும் இதயபாவமும் கலந்து ரொம்ப நயமாய் இருந்தது. இவர்களுடைய பாடல்களே விழாவைச் சிறப்பித்தன என்று நன்றாய்ச் சொல்லலாம். கமிஷனர் ராமலிங்க முதலியார் அவர்கள் ஒவ்வொரு துறையிலுமே பாரதியாருக்கிருந்த சுதந்திர நாட்டத்தை பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னார்கள். முத்துசிவனும் ஸ்ரீனிவாசராகவனும் சில விஷயங்களை எடுத்து அழுத்தமாகச் சொல்லி விளக்கினார்கள். நான் பாரதியும் தேசிகவிநாயகம் பிள்ளையுந்தான் கவி பாடியிருக்கிறார்கள் என்பதை உதாரணங்கள் மூலமாகக் காட்டினேன். விழாவை எல்லாரும் அனுபவித்தார்கள். தாங்கள் வந்திருந்தால் ரொம்ப நன்றாய் இருந்திருக்கும். வி.பி.எஸ் அவர்களும் வந்திருந்தார்கள். ரொம்ப அனுபவித்தார்கள்.

நானும் நடராஜனும் பாட்டியும் 25.9.38 இல் சென்னைக்குப் புறப்படுகிறோம். தீபாவளியை சென்னையிலேயே கொண்டாடிவிட்டுத் திரும்புவதாக உத்தேசம்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖