பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

25


2. சாம்பசிவம் தெரு,

தியாகராஜ நகர்.

3.3.39

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் மிக்க அருமையோடு எழுதிவிடுத்த கடிதம் வந்து சேர்ந்தது. கடிதத்தை எல்லாரும் அனுபவித்தோம். முக்கியமாக அருணாசலம்பிள்ளை அவர்கள் ரொம்பவும் வியந்து அனுபவித்தார்கள். தங்கள் கடிதம் என் கைக்கு வந்த சமயம் அருணாசலம்பிள்ளை அவர்கள் உடன் இருந்தார்கள். அடுத்தாற்போல் சி.எஸ். அவர்களும் வந்தார்கள். அவர்களிடத்திலும் வாசித்துக் காட்டினார்கள். அவர்களும் நடை முதலான எல்லா அம்சங்களையும் பாராட்டிப் பேசினார்கள். இவ்வளவும் நான் திருநெல்வேலி போய் இங்கே வந்த பின்புதான்.

தாங்கள் தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் பாடல் சம்பந்தமாகப் பேசும்போது தாங்களும் அங்கங்கே பார்த்த பாடல்களைச் சேகரித்துச் சேர்த்து வைத்திருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். கலைமகள் மாசி மலரில் நான் ஒரு கட்டுரை மலரும் மாலையும் சம்பந்தமாக எழுதியிருக்கிறேன். அதில் தங்களைப் போலவே நானும் தே.வி. பாடல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன் என்று எழுதியிருக்கிறேன். நாம் இருவரும் உண்மையை அழுத்தமாகச் சொல்லுவதற்கு ஒரே உத்தியைக் கையாண்டிருக்கிற விஷயம் இங்கு எல்லாருக்கும் வியப்பைத் தந்தது. கட்டுரை நகல்கள் வந்ததும் தங்களுக்கு ஒன்று அனுப்புகிறேன். -

தாங்கள் தமிழ் ஆர்வம் விளாத்திகுளம் படாகையில் பரவி இருக்கிறது என்பது தெளிவாய்த் தெரிகிறது. கம்பர் விழா அங்கே ரொம்ப கோலாகலமாய் நடக்கும் என்பது நிச்சயம். அதில் நான் கலந்துகொள்ள வேணும் என்று