பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

47


கம்பராமாயணத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். கணேசன் கம்பர் விழாவைத் தன்னிச்சையாய் நடத்துவதால் மேலே சொன்ன மனப்பாங்கு அவ்வளவாக வெளிக்காட்டவில்லை. அல்லாத ப௯ம் கம்பப் பிரசங்கிகள் எல்லாரும் கம்பரையும் தமிழையும் அவ்வளவாக மேலே போய்விடாமல் பார்த்துக்கொள்ளும் கடமை பூண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

யுனிவர்சிட்டியிலுள்ளவர்கள் தமிழைப் பற்றி பேசும்போது ரொம்ப அளந்து பேச வேண்டியிருக்கிறது. கம்பரை 12 வது நூற்றாண்டுக்கு முன் போய்விட இடங்கொடுக்கக்கூடாது. தமிழில் அப்பர் காலத்துக்கு முன் இசையோடு கூடிய பாடல் கிடையாது என்றெல்லாம் சொல்லித் தீர்க்க வேண்டியிருக்கிறது. இப்படி யெல்லாம் சொன்னால்தான் Revalutionary என்று தங்களை எண்ணுவார்களாம். அர்த்தம் என்ன? மைலாப்பூர் நண்பர்கள் சிலர் சொல்லுகிறதை ஒட்டியே தமிழும் சரித்திரமும் இருக்கவேண்டும் என்பது கொள்கை.

எப்படியோ இந்த மனப்பாங்கை நம்முடைய நண்பர்கள் கண்டு கொண்டார்கள். நல்ல கருவிதான் என்று எண்ணினார்கள். நாம் எல்லாம் இருந்தால் செளகரியம் அல்ல என்றும் தெரிந்து கொண்டார்கள்.

தாங்கள், அருணாசலம்பிள்ளை நீலாவதி அம்மாள் எல்லாருக்கும் சூழ்ச்சி இன்னதென்று தெரிந்துகொண்டது. வையாபுரி பிள்ளை அவர்கள் அப்படி யாதொரு சூழ்ச்சியும் கிடையாது என்று வாதாடுகிறார்கள். நாம் என்ன செய்கிறது.

ஆனால் காரைக்குடியில் உள்ளவர்கள் எல்லாரும் சூழ்ச்சி செய்துவரும் குழாத்தை கண்டுகொண்டார்கள். அதுபோதும். இந்த வருஷத்திய கம்பர் விழாவில் இதுவே முக்கியமான காரியம் என்று சொல்லலாம்.