பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

65




கல்கி
கீழ்ப்பாக்கம்
சென்னை
2.10.44

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் அக்கறை காரணமாகவே டிக்கெட் கிடைத்தது. பிரயாணம் செய்ய முடிந்தது. எழும்பூரில் வந்து இறங்கவும் முடிந்தது. கல்கி கார் ஆட்கள் எல்லாம் ஸ்டேஷனில் தயாராய் நின்றன. செளகரியமாகவே கல்கி வீடு வந்து சேர்ந்தேன்.

இதெல்லாம் ஏது, திருநெல்வேலியில் டிக்கெட்டு கிடைக்காமல் போனால்?

கலைவிழாவில் அழைப்பையும் பத்திரிகையையும் பார்த்து கல்கி ரொம்ப அழகாய் இருக்கிறது என்று பாராட்டினார்கள். விழா நடைபெற்றது அதைவிட அழகாய் இருந்தது என்று சொன்னேன். எல்லாம் உயர்ந்த தோரணையில் இருந்தது என்றும் சொன்னேன். -

இதுவரையும் திருநெல்வேலி ஆடவர் பெண்டிருக்குத் தமிழ் விழா என்றால் ஒரே தலைவலிதான். நம்மைப் போன்றவர்களுக்கோ இம்சைக்கு ஏற்பட்ட சூழ்ச்சி என்றுதான் தோன்றும். அத்தகைய சூழ்ச்சிகளுக்குத் தாங்கள் உலைவைத்துவிட்டீர்கள்.

எல்லாம் முதலிலிருந்து கடைசி வரை அனுபவிக்கத்தக்கதாய் இருந்தது. கவிஞர் தே.வி. அவர்கள் வந்து பிரசன்னமானது சாமானிய காரியமா? எத்தனையோ ஆடவர் பெண்டிர் குழந்தைகள் அவர்கள் பாடல்களைப் பாடுகிறார்கள், அனுபவிக்கிறார்கள். பாடும்போது கவிஞரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை உண்டாவது இயல்பு. அந்த