பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 விலை பெற்றும், கிளைக்கதை துணைநிலை பெற்றும் அமைய வேண்டும் என்பது தெளிவாகிறது. மாந்தர்களின் 4. மணிமேகலையில், கிளைக்கதை பெயரிலேயே, சில காதைத்தலைப்புக்கள் அமைநதுள்ளன.' இது, சாத்தனார் கிளைக்கதைக்குக் கொடுத்த முக்கியத்து- வத்தை மேலும் தெளிவாக்குகிறது. ஆனால், சிலம்பில் இவ்வாறு கிளைக்கதை மாந்தர் பெயரில் காதைத் தலைப் புக்கள் அமைக்கப்படவில்லை. 4.10 கோவலன் முன்னோன் வரலாறு சிலம்பு, மேகலை இரண்டிலுமே கிளைக்கதையாக அமைந்துள்ளது. மேகவை- யில், இவ்வரவாறு தனி ஒரு கிளைக்கதையாக விரிவாக பேசப்பட்டுள்ளது. ஆனால், சிலப்பதிகாரத்தில் இவ்வர. னாறு தனிக்கிளைக்கதையாசு அல்லாமல், கிளைக்கதையின் ஒரு பகுதியாக மட்டும் சுருக்கமாகப் பேசப்பட்டுள்ளது. . 4.11 கிளைக்கதைகளை, ஒரே இடத்தில் அடுக்கிக் கூறும்முறை, இரண்டு காப்பியங்களிலுமே காணப்படுகிறது. ஒரே, கருப்பொருளை ஒட்டிய வேறுபட்டட கதைகளை, இப் படி ஒரே இடத்தில் தொகுத்துப் பேசுதல் காப்பியப் பொருண்மைக்கு நலம் பயக்கும் என்பதால். இரண்டு புல- வரிடமுமே இத்தன்மையைக் காண முடிகிறது. 4.12 மணிமேகலையில், சில சிளைக்கதைகள் ஒன்றுக்கு மேற்பட்ட காதைகளில் பேசப்படுகின்றன. இத்தகைய அமைப்பு முறை சிலப்பதிகாரத்தில் இல்லை. அதாவது, சிலப்பதிகாரத்தில் கிளைக்கதைகள் ஒரே இடத்திலேயே சொல்லப்பட்டுவிடுகின்றன. மேகலையின் சில கிளைக்கதை, கள்" பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு கூற்றில் சொல்லப்பட்டிருக்கின்றன. 4.13 பௌத்த மதக் கொள்கைகளைப் பேச, கிளைக் கதைகளைச் சாத்தனார் பயன்படுத்திக் கொண்டது போல்,