பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

103 சிலப்பதிகாரத்தில் கிளைக்கதைகள்' என்ற தலைப்பின்கீழ் 2.4 3ல் காண்க. 4. ஆபுத்திரன், ஆதிரை, காஞ்சனன், கந்திற் பானவ என்ற இக்கிளைக்கதை மாந்தர்களின் பெயர்களால் மணி மேகலையில் காதைத் தலைப்புக்கள் அமைந்துள்ளன. 5. மாடலன் கூறும் மூன்று கிளைக்கதைகளில், முதற். கதையின் ஒரு பகுதியாக இக்கதை அமைந்துள்ளது. இச். செய்தியைச் சிலப்பதிகாரம்; 15:28-37-ல் காண்க. 6. சுதமதி முற்பிறப்புக் கதை, பீலிவளை -நெடுமுடிந் கிள்ளி வரலாறு என்ற கிளைக்கதைகள். 7. சுதமதி கதை பிற்பகுதி, சக்கரவாளக் கோட்டம் எழுந்த கதை, ஆபுத்திரன் கதை, விசாகை-த - தருமதத்தன் கதை என்பன. 8. சக்கரவாளக் கோட்டம் எழுந்த கதையில் வரும் கோதமி வரலாறு' புத்தஜாதகக்கதையில் வரும் கௌதமி ரலாறு போன்றதே. 9. மாடலன் கூறும் கோவலன் பற்றிய மூன்று கதுை. களில் முதல் கதையின் பகுதியாக வரும் கீரிப்பிள்னை கதை பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்றாகும். . 10. சிலம்பில் பொற்கொல்லன் கூறும் "அரண்மனைத் திருட்டு' பற்றிய கதையும், மேகலையில் 'ஆபுத்திரன் கதை யும் ஒன்றிய கிளைக்கதைகளாக வருகின்றன. 11. இப்போக்கிற்குரிய காரணத்தையும், விளக்கத்தை- யும் சிலப்பதிகாரத்தில் கிளைக்கதைகள்' என்ற தலைப்பின் கீழ் 2.4.3ல காண்க. 12. இதற்குரிய விளக்கத்தை 'மணிமேகலையில் கிளைக் கதைகள்' என்ற தலைப்பின்கீழ் 3.4.2ல் காண்க.