________________
122 களும் மற்றத் துணைக்கதைகளுக்குரிய அமைப்பையே பெற் றுத் திகழும். 5.5 துணைக்கதைகள் பயின்று வரும் விதம்; துணைக்கதைகள் வர்ணனையாக, எடுத்துக்காட்டாக, பின்னணி விளக்கமாக, உவமையாக, இறைவனைப் பரவு- முகமாக என்று பலவிதமாகக் காப்பியத்தில் பயின்று வகு கின்றன.இன்னவிதமாகத்தான் வர வேண்டும் என்ற தனிப் புட்ட வரையறையைத் துணைக்கதைகளுக்குத்தர முடியாது. உவமையாக வரும் துணைக்கதைகள் காப்பிய உவமைகள் {allusions) என்று அழைக்கப்படும். 5.5.1 வர்ணனையாக வரும் துணைக்கதைகள்; கதை மாந்தர்களையோ, தெய்வங்களையோ, இடங். களையோ கூறும்போது, அவற்றை வர்ணித்துக்கூறும் வழக்- கய் காப்பியத்திற்குரியது. சில இடங்களில் அவை கதை நிகழ்ச்சிகளோடு வர்ணிக்கும்போது துணைக்கதையாகி விடு. கின்றன. சான்று: மாயவனைப் பற்றிப் பாடும் மகளிர், அவனை வர்ணித் துப் பாடுகின்றனர். அவன் நிறத்தையோ, தோற்றப் பொலிவையோ, வர்ணித்துப்பாடாது, அவன் அவதாரச் செயலைக் கூறி வர்ணித்துப்பாடுகின்றனர். ஈக என்று "பாம்பு கயிறாகக் கடல் கடைந்த மாயவன்' கூறும்போது, கண்ணனின் லீலைகளில் ஒன்றான திருபாற் கடல் கடைந்த நிகழ்ச்சி அவனை வர்ணிக்கும்முகமாக வந்து, துணைக் கதையாகச் சிறக்கிறது. 5.5.2 எடுத்துக்காட்டாக வரும் துணைக்கதைகள் : காப்பிய மாந்தர்கள், தங்கள் உடலின் போது, சிறு எடுத்துக்காட்டுகளாகக் கதைகளைக குறிப்பிடுவதும்