பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

124 என மாதவி, ‘ஆ.ரத்தியர் சாபத்தால் நிலவுலகில் பிறந்த தெய்வ மங்கை வழிவந்தவள்' என்ற புராணக் கதைப் பின்னணியைத் தந்து, அவள் பாத்திரத்தை உயர்த்திச் காட்டுகிறார். உவமையாக வரும் துணைக்கதை ! . புலவர்கள் ஒரு பொருளையோ, ஒரு நிகழ்ச்சியையோ. ஒரு இடத்தையோ விளக்க, தெரிந்த ஒன்றை உவமித்துக் காட்டி விளக்குவது வழக்கம். காப்பியப் புலவர்கள், இயற்கையை உவமித்துக் கூறுவது போள், கதை நிகழ்ச்சி சுளையும் உவமித்துக் கூறுவது வழக்கம். சான்று : பெருமக னேவ லல்ல தியாங்கனும் அரசே தஞ்சமென் றருங்கர னடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் பெரும் பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்' இவ்வடிகளில், கோவலன் புகாரைப் பிரிந்து வந்தது. இராமன் அயோத்தியைப் பிரிந்து வந்தது போல் இருக் கிறது என்றும், புகார் மக்கள், அயோத்தி மக்கள் போல் தங்கள் பெருமகனைப் பிரிந்து பேதுற்றனர் என்றும் காட் டப்படுகிறது. இங்கு, இராமன் கதை நிகழ்ச்சி உவமையாக எடுத்தாளப்பட்டுள்ளது. இப்படி, உவமை மொழியாகவும் துணைக்கதைகள் பயின்று வரும். பரவுமொழியாக வரும் துணைக் கதைகள்: இறைவனையோ, மன்னனையோ வாழ்த்தி போற்றும் போ த து, அவர்கள் செயல்களைக் கூறிப் பரவுதல் வழக்கம். அந்தச் செயல்கள் முறையே புராணக்கதை நிகழ்ச்சியாகவும், வரலாற்று நிகழ்ச்சியாகவும் அமைந்து நிற்கும், பரவு மொழிகளாக வரும் துணைக்கதைகள் பெரும்பாலும் அடுக்கி ஆகும்.