________________
121 களும் இடம் பெறுகின்றன. கிளைக்கதைகளில் மிகக்குறை - வான புராணக்கதைகளை எடுத்தாண்ட அடிகள், துணைக்க கதைகளில் பெரும்பாலானவற்றைப் புராணக் கதைகளாகப் படைத்ததற்குக் காரணம் உண்டு. சிலம்பின் மையக்கதை செழிப்புமிக்க வணிசுக் குடி மகனைப்பற்றியது புராணம் சம்- பந்தப்படாத அம் மையக் கதையை வளர்க்க வரும் கிளைக் கதைகளையும் புராணக் கதைகளாகப் படைக்க முடியாது. ஒரே ஒரு இடத்தில் காப்பியத் தலைமைப் பாத்திரமான மாதளியின் குலப்பெருமையைப் பேசும் நோக்கில் புராணக்- சதையைக் கிளைக் கதையாக்கியுள்ளார் அடிகள். இக்கதை கூ வலியப் பேசப்பட்ட புராணக்கதையே ஆனால், அதை மிக அழகாகக் காப்பியப் பாத்திரத்துடன் தொடர்பு படுத் தீப் பேசியுள்ளது அடிகளின் புலமைக்குச் சான்றாகும். இப்- படி, கிளைக் கனத்களாகப் புராணக் கதைகளைப் படைக்க முடியாத நிலையில், நாட்டு மக்கள் போற்றும் அவ்வகைக் கதைகளைத் தன் காப்பியத்தில் உவமையாகவும், வர்ண- னையாகவும், பின்னணி விளக்கமாகவும். பரவல் மொழியாக உம்படைத்துக் காட்டியிருக்க வேண்டும். சிலம்பை நன்கு ஆராய்ந்தால், மக்கள் அதிகம் போற்றும் கதைகள், காப்பி. யத்துள் இடம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்குட னேயே, அடிகள் புராணக்கதைகளை அதிகமாகத் துணைக் கதைகளாக எடுத்தாண்டுள்ளார் என்பது புலப்படும். 6.2 புராணம் பற்றிய துணைக்கதைகள் சிலப்பதிகாரத்தில் மொத்த துணைக் கதைகளில் 43 கதைகள் புராணம் பற்றியவையே. இவற்றில் திருமாலின் அவதாரம்பற்றிய கதைகளே அதிகமாக இடம்பெற்றுள்ளன. அவை தவிர. பாற்கடல் கடைந்த வரலாறு, கொற்றவை முருகன் பற்றிய புராணக் கதைகளும் துணைக்கதைகளாகப் பயின்று வந்துள்ளன.