________________
122 ம், தாருகனைக் கொன்ற திகழ்ச்சியும் துணைக் கதைகளாக இடம் பெற்றுள்ளன. இப்படிக்கண்ணகியை, கொற்றவையு டன் ஒப்பிட்டுப் பேசும் போது, அவளைப் பற்றிய புராண நிகழ்ச்சிகளை இடைமிடைந்து பேசும் அடிகளின் புலமைப் (பாக்கு எண்ணிச் சுவைக்கற்பாலது. தி,2.4 முருகனைப் பற்றிய துணைக்கதைகள்: முருகனைப் பற்றி ஐந்து துணைக் கதைகள் சிலம்.பில் டம் பெறுகின்றன. குரனை முருகன் வென்றது, அவுணர்களை அழித்தது. கிரவுஞ்ச மலையைப் பிளந்தது, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தது என்ற செய்திகள் துணைக்கதைகளாக இடம் பெறுகின்றன. குரனை வென்ற நிகழ்ச்சி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுத் திரும்பத் திரும்ப பசப்படுகிறது. முருகனைப் பற்றிய கதைகள் குன்றக் குர கவயிலேயே அதிகம் பேசப்படுகிறது. சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர் திருமுலைப்பா லுண்டான் திருக்கைவே என்றே என்றும், வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகுபெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே என்றும், குற மசுளி முருகனைப் பற்றிப் புகழ்ந்து பாடுகின் றனர். இப்படி, மலைவாழ் குரவர்களி குறிஞ்சித் தெய்வ டாகிய முருகனைப் பற்றிய செய்திகளை, அவர்கள் பாடும் குரவைகளின் மூலமாகவே அடிகள் படைத்துக்காட்டியுள்ளது அவர் புலமைக்கு மற்றொருச் சான்றாகத் திகழ்கின்றது. 6.2.5 பிற புராணத் துணைக் கதைகள்: , மேற்கூறிய புராணக்கதைகளைத் தவிர, சிவன் நான்முகன் காண பாண்டுரங்க கூத்து ஆடியது. திருமகள் கொல்லிப் பாவை உருவெடுத்தது, காமவேள் பேடி உருவம் எடுத்தது.