பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

128 அயிராணி கடைசியர் உருவம் எடுத்தது போன்ற புராண நிகழ்ச்சிகளும், அகத்தியர் பற்றிய கதைகளும், நள சக்கர- வர்த்தி காட்டில் மனைவியை விட்டுப்பிரிந்த புராணக்கதை. யும் சிலம்பில் துணைக்கதைகளாகப் பயின்று வந்துள்ளன. இவற்றில் முதலில் கூறிய கதைகள் மாதவியின் ஆடலைச். சுட்டுமுகமாகப் பயின்று வந்துள்ளன. நளன் கதை கவுந்தி- குடிகளின் வாய்மூலமாகக்கோவலனிடம் எடுத்துரைக்கப்படு. கிறது. அகத்தியர் சாபத்தால் ஊர்வசி மண்ணில் பிறந்து கதை பின்னணி விளக்கமாகவும். அகத்தியர் பொதிகை வந்த வரலாறு வர்ணனையாகவும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு, புராணக் கதைகள் துணைக்கதைகளாகச் சிலம்பில் பெருமளவு இடம்பெற்றுள்ளன. இக்காப்பியத்துள் புராணக் கதைகளில் சரிபாதி பரவல் மொழியாகவும், மிகச் சிறுபான்மை உலமைகளாகவும் பயின்று வந்துள்ளன. .3 வரலாற்றுத் துணைக்கதைகள் காப்பியம்,பரந்துபட்ட சமுதாயம் தழுவிய ஒன்று என் பதால் அரசன் முதல் சாதாரண குடிமக்கள் வரை உள்ள செய்திகளைத் தழுவியதாக அமைத்திருக்க வேண்டும் வர- லாற்றுக் கதைகள். மன்னரைப் பற்றிய செய்திகளை அடிப்- படையாகக் கொண்டுத் திகழும். நாட்டுப் புறக்கதைக சாதாரண மக்களைத் தழுவியதாக அமைந்திருக்கும். சிலப் பதிகாரத்தில், வரலாற்றுக் கதைகள் கிளைக்கதைளகா 5 வந்துள்ளதுபோல் துணைக்கதைகளாகவும் வந்துள்ளன. ஐந்து வரலாற்றுக் கதைகளும், மூன்று புராண வரலாற்றுக் கதைகளும், சிலம்பில் துணைக் கதைகளாக வந்துள்ளன. சோழமுன்னோர்களான மனுபற்றியும்,சிபி பற்றியும் உள்ள கதைகள் திரும்பத் திரும்பப் பயின்று வந்துள்ளன மனு, தன் Aமகன் என்று பாராது பசுவிற்கு முறை செய்த நீதிமுறையும், சிபி, புறாவென்றுபாராதுஅதனைக்காப்பாற்றத் தன் தசை-