பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

129 தக் கொடுத்து உதவிய பெருந்தன்மையும் அடிகளைக் கவர்ந்திருக்க வேண்டும் ஆகவே, இக்கதைகள் ஒவ்வொன். றையும் மூன்று தடவைகள் எடுத்தாண்டுள்ளார். அடுத்ததாக, சோழ மன்னர்களில் போற்றத் தகுந் த என்னன் கரிசாலன், அவனைப் பற்றிய நிகழ்ச்சியும் துணைக் கதையாகப் பயினறு வந்துள்ளது. கரிகால் வளவன் வட- திசைப் போருக்குச் சென்று, இமயத்தில் புலி பொறித்த நிகழ்ச்சி ஈட்டப்படுகிறது. அவனுடைய வடதிசைப்போ } வின்ன விளக்கக் கதையாகப் பயின்று வத்துள்ளது. கரி- காலன் மண்டபங்களைப் பெறக் காரணமாக, இவ்வட திசைப் போர்ச் செலவு பேசப்படுகிறது. கண்ணகி, பத்தினிப் பெண்டிர் எழுவர் பற்றிப் பேசும் போது, கரிகாலனின் மகள் ஆதிமந்தி பற்றியும் பேசுகிறாள் ஆதிமந்தி, தன் கணவனான ஆட்டனத்தியைக் காவிரி வெள்ளம் அடித்துச் செல்ல, அவனைத் தேடிக் கரைவழி வாகவே சென்று, எங்கும் காணாது காவிரி கடலோ) களக்கும் இடத்தில் நின்று 'அல்நவில் தோளாயோ' என்று தாளாது அரற்றி அழ, கடல், அவள் கற்பின் மாண்பு கண்டு ஆட்டனத்தியை அவள் கண்முன் நிறுத்தியது. இவ்வரலாறு குறுந்தொகையினும், அகநானூற்றிலும் கூறப்பட்டுள்ளது. Sc இதனால், ஆதிமந்தியின் கற்பின் மாண்பு நாடெங்கும் போற்றப்பட்டு, இலக்கியங்களிலும் பரக்கப் போற்றப்பட்- டது என்பதை அறியலாம். நாடு போற்றும் இவ்வரலாற்றுக் கதையை அடிகளும் தக்க இடத்தில் எடுத்தாண்டு காப்பி- யத்தைச் சுவைபடுத்தியுள்ளார். சேரமன்னன் நெடுஞ்சேரலாதன் பாண்டவர் கௌரவச் போரில், இருதரப்பினருக்கும் சோறிட்ட வரலாற்று நிகழ்ச் நியும் துணைக்கதையாகப் பேசப்பட்டுள்ளது. இவ்வரலாற்று நிகழ்ச்சியினைச் சங்க நூல்களும் குறிப்பிடுகின்றன.அடிகள், இக்கதையைச் சேர குலத்தைப் போற்றும்முகமாக எடுத்